பிரான்ஸ் அரசு அறிவித்துள்ள புதிய கட்டுப்பாடுகளினால் அதிருப்தி அடைந்த மாகாண முதல்வர்…

75

கொரோனா வைரஸ் காரணமாக அரசு அறிவித்துள்ள புதிய கட்டுப்பாடுகள் மீது பல சர்ச்சைகள் எழுந்துள்ளன.

கடந்த(23/09/2020) புதன்கிழமை ‘பாரிசில் இரவு 10 மணியுடன் மதுச்சாலைகள் மூடப்படவது உட்பட பல புதிய கட்டுப்பாடுகளை சுகாதார அமைச்சர் அறிவித்திருந்தார். அதைத் தொடர்ந்து, இந்த புதிய கட்டுப்பாட்டுக்கு பல தரப்பில் இருந்தும் எதிர்ப்பு கிளம்பியது.

Île-de-Franceசின் மாகாண முதல்வர் Valérie Pécresse இது தொடர்பாக தெரிவிக்கும் போது, “அரசு மக்களின் கருத்தை கேட்காமல் தன்னிச்சையாக முடிவு எடுத்துள்ளது. உள்ளூர் சமூகங்களுடன் கலந்துரையாடாமல் எடுக்கப்பட்ட இந்த முடிவினால் பல பொருளாதார நெருக்கடிகளை சந்திக்க நேரிடும்” என தெரிவித்திருந்தார்.

எந்த விதமான முன் மாதிரிகளும் இல்லாமல் அரசு ‘உடனடியான’ தீர்வு ஒன்றுக்கு ஆசைப்படுகின்றது எனவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.