பிரான்ஸின் அதிபர் எம்மானுவல் மக்ரோன் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்காகி இருக்கிறார்.

இத்தகவலை எலிஸே மாளிகை இன்று வெளியிட்டிருக்கிறது.

வைரஸ் தொற்றியதுக்கான முதல் அறிகுறி தென்பட்டதை அடுத்து நடத்தப்பட்ட RTPCR பரிசோதனையில் அவருக்கு தொற்று உறுதிசெய்யப் பட்டுள்ளது.

அதிபர் மக்ரோன் ஏழு நாட்களுக்கு தன்னைத் தனிமைப்படுத்தியவாறு தனது நாளாந்த நடவடிக்கைகளைத் தொலைவில் இருந்து மேற்கொள்வார் என்று எலிஸே மாளிகையில் இருந்து விடுக்கப்பட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

அவருக்குத் தொற்றின் தீவிர அறுகுறிகள் எதுவும் ஏற்படவில்லை என்பதை எலிஸே மாளிகை வட்டாரங்கள் உறுதிப்படுத்தி உள்ளன என்று ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

42 வயதான அதிபருக்கு வைரஸ் தொற்றியுள்ளதை அடுத்து அவருடன் தொடர்புகளைப் பேணிவந்த பிரதமர் Jean Castex அவர்களும் தன்னைத் தனிமைப்படுத்திக் கொள்ளவுள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.