கடந்த 24 மணி நேரத்திற்குள், திடீரென பிரான்ஸ் முழுவதற்குமான தொற்று விகிதம் உச்சத்தைத் தொட்டுள்ளது.
100.000 பேரிற்கு 307.8பேர் என்ற விகிதத்தில் கொரோனாத் தொற்று விகிதம் (Taux d’incidence) அதிகரித்துள்ளது. இந்த விகிதம் 200 இனைத் தாண்டினாலே, அது கடுமையான எச்சரிக்கை நிலை என்பது குறிப்பிடத்தக்கது.
இல்-து-பிரான்சில் மட்டும் இது 550 இனைத் தாண்டி உள்ளது.
வைத்தியசாலைகள் அனைத்தும் பெரும் அழுத்தத்தில் உள்ளன. நவம்பர் மாதம் பிரான்சினைக் கொரோனா வைரசின் இரண்டாவது அலை தாக்கியபோது இருந்ததை விட, வைத்தியசாலைகளில் கொரேனாத் தொற்று நோயாளிகள் அதிகரித்துள்ளனர்.
ஞாயிற்றுக்கிழமைகளில் ஆய்வுகூடங்களின் பெறுபேறுகள் முழுமையாகக் கிடைக்காமையினால், திங்கட்கிழமைகளில் கொரோனத் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை வெறும் 3000 முதல் 4000 வரை மட்டுமே கிடைப்பது வழமை.
அப்படியிருந்தும் கூட கடந்த 24 மணி நேரத்தில் 15.792 பேரிற்குத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பிரான்சில் தொற்றிற்குள்ளானவர்களின் தொகை 4.298.395ஆக உயர்ந்துள்ளது.
கடந்த 24 மணிநேரத்தில், 343 பேர் சாவடைந்துள்ளனர். இதனால் பிரான்சில் கொரோனாவால் சாவடைந்தவர்கள் தொகை 92.621 ஆக உயர்ந்துள்ளது.
வைத்திசாலைகளில் மட்டும் 67.216 பேர் சாவடைந்துள்ளனர்.
வைத்தியசாலைகளில் 26.488 நோயாளிகள் னுமதிக்கப்பட்டுள்ளனர்.
நாளாந்தம் தொடர்ச்சியாக அதிகரித்து, தீவிர சிகிச்சைப் பிரிவில் உயிராபத்தான நிலையில் 4.548 (+142) கொரோனா நோயாளிகள் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.