பிரான்ஸ் பாரிஸில் சற்று முன்னர் கோர படுகொலை

20

Seine-et-Marne தெருவில் வெள்ளிக்கிழமை மாலை கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்ட இளைஞர் ஒருவரின் சடலம் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது என ஐரோப்பா 1 தெரிவிக்கின்றது.

AFP இனால் நேர்காணல் செய்யப்பட்ட பொலிஸ் மற்றும் நீதித்துறை வட்டாரங்களின்படி Seine-et-Marne இல் உள்ள Saint-Thibault-des-Vignes ஐ சேர்ந்த 21 வயதுடைய இளைஞரை யாரோ சுயநினைவோடுதான் கத்தியால் குத்தி கொலை செய்திருக்க வேண்டும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் குறித்த சடலத்தை பாரிஸ் தடயவியல் நிறுவனம் பிரேத பரிசோதனை செய்ய வேண்டும் என்றும், குற்றம் தொடர்பான மேலதிக விசாரணைகளை Versailles இன் நீதித்துறை போலீஸார் முன்னெடுக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சம்பவத்தன்று இரவு 8:30 மணியளவில் பாரிஸிலிருந்து இருபது கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள சுமார் 6,500 மக்கள் வசிக்கும் இந்த நகரத்தில். “21 வயது மதிக்கத்தக்க இளைஞன் ஒருவர் தெருவில் தரையில் வீழ்ந்து கிடந்தார்.

தீயணைப்பு வீரர்களால் அவர் கண்டுபிடிக்கப்பட்ட போது படுகாயமைடந்த நிலையில் அவர் இறந்திருந்தார் என்றும், இந்த தாக்குதலின் பின்னணி விபரங்கள் எதுவும் கிடைக்கப்பெறவில்லை என்றும் Meaux வழக்கறிஞர் அலுவலகம் சனிக்கிழமை தெரிவித்தது. மேலும் குற்றம் தொடர்பான மேலதிக விசாரணைகள் Versailles பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
பகிருங்கள்..