பிரான்ஸில் கவச வாகனத்தை கடத்தி €275,000 பெறுமதியுள்ள நகைகள் திருட்டு!
கவச வாகனம் ஒன்று ஆயுததாரிகளால் சுற்றிவளைக்கப்பட்டு ஆயுததாரிகளால் கொள்ளையிடப்பட்டுள்ளது. நேற்று வெள்ளிக்கிழமை Lyon நகரின் rue Thomassin வீதியில் வைத்து இந்த கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. குறித்த வீதியில் உள்ள நகைக் கடை ஒன்றின் முன்பாக நின்றிருந்த கவச வாகனம் ஒன்றை சில ஆயுததாரிகள் சுற்றி வளைத்தனர். பின்னர் வாகனத்தை கடத்தி, அதற்குள் இருந்த தங்க மற்றும் வைர நகைகளை கொள்ளையிட்டுச் சென்றனர்.
கொள்ளயிடப்பட்ட மொத்த நகைகளின் மதிப்பு €275,000 யூரோக்கள் எனவும், இக்கொள்ளையின் போது துப்பாக்கிச்சூடு எதுவும் இடம்பெறவில்லை எனவும் இது தொடர்பான விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.