கடந்த 24 மணி நேரத்தில் 42.619 பேரிற்குத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பிரான்சில் தொற்றிற்குள்ளானவர்களின் தொகை நான்கரை மில்லியனைத் தான்டி 4.508.575 ஆக உயர்ந்துள்ளது
கடந்த 24 மணிநேரத்தில், 194 பேர் சாவடைந்துள்ளனர். இதனால் பிரான்சில் கொரோனாவால் சாவடைந்தவர்கள் தொகை 94.469 ஆக உயர்ந்துள்ளது.
வைத்திசாலைகளில் மட்டும் 68.466 (+190) பேர் சாவடைந்துள்ளனர். முதியோர் இல்லங்களில் 25.999 பேர் சாவடைந்துள்ளனர்.
27.259 நோயாளிகள் கொரேனாத் தொற்றின் தீவிரத்தினால் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த 24 மணிநேரத்திற்குள் மட்டும் 1;567 பேர் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தீவிர சிகிச்சைப் பிரிவில் மட்டும் கடந்த 24 மணிநேரத்திற்குள் 332 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நாளாந்தம் தொடர்ச்சியாக அதிகரித்து, தீவிர சிகிச்சைப் பிரிவில் உயிராபத்தான நிலையில் 4.791 கொரோனா நோயாளிகள் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பிரான்சில் நாளிற்கு நாள் அதிர்ச்சிக்குரிய விதமாக அதிகரித்து 100.000 பேரிற்கு 350 பேர் என்ற விகிதத்தில் கொரோனாத் தொற்று விகிதம் (Taux d’incidence) உச்சமடைந்துள்ளது. இந்த விகிதம் 200 இனைத் தாண்டினாலே, அது கடுமையான எச்சரிக்கை நிலை என்பது குறிப்பிடத்தக்கது.
கொரோனத் தொற்றுப் பரிசோதனை மற்றும் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களிற்கான எண்ணிக்கையின் வீதமானது 8,14%, ஆக உயர்ந்துள்ளது.