பிரான்ஸ் கிரிக்கெட் அணிக்கு 6 தமிழர்கள் தெரிவு…

57

பிரான்ஸ் கிரிக்கெட் சம்மேளத்தினால் நேற்று உத்தியோகபூர்வமாக 25 பேர் கொண்ட பட்டியல் அறிவிக்கபட்டுள்ளது.

அதில் மூன்று ஈழத்தமிழர்கள் தெரிவாகியுள்ளமை என்பது சிறப்பாகும்…

திலீப் பாலசுப்பிரமணியம் சுவேந்திரன் சந்திரகுமாரன். அலிட்டின் ஜோன்மாரி.. இவர்களுடன் தமிழகத்தைச் சேரந்த மேலும் மூவர் தெரிவாகி உள்ளமையும் குறிப்பிடத்தக்க விடயம்…

இவர்களில் தீலிப் பாலசுப்பிரமணியம் , பிரான்ஸில் வாழும் பிரபல கவிஞரான லதீப் பாலசுப்பிரமணியம் அவர்களின் சகோதரர் என்பதும் மிகச் சிறப்பாகும். கடந்த சில வருடங்களாக பிரான்ஸும் கிரிக்கெட் விளையாட்டில் அதீத அக்கறை காட்டிவருவதும் இங்கு கவனிக்கதக்கது…

சிறிலங்காவில் இன்றைய இளைய தலைமுறை,தனி சிங்கள இனவாத கிரிக்கெட் அணிக்கு தமது ஆதரவை தெரிவித்து வருவதும்,அவர்கள் one nation one country என்று பச்சையாகவே இனவாதத்தை விளையாட்டு ஊடாக விதைப்பதுமாக உள்ளனர்.எத்தனையோ திறமையான தமிழ் வீரர்கள் புறக்கணிப்பட்டு வெறும் பார்வையாளர்களாக அமர்த்தப்பட்டிருக்கின்றனர்.அவர்கள் பதினொரு பேரும் சிங்களவர்களாக விளையாடி பழக்கப்பட்டுவிட்டனர்.எத்தனையோ இளைஞர்களின் கிரிக்கெட் கனவுகள் தவிட்டு பொடியாகி கொண்டிருக்கின்றனர்.ஆனாலும் திறமைக்கு முன்னுரிமை கொடுக்கும் புலம்பெயர் தேச அணிகளில் தமிழர்கள் இன்னும் இன்னும் தம் திறமைகளை காட்டி எடுக்கும் அங்கீகாரங்கள்,எம் தமிழ் இளையோருக்கு பெருத்த நம்பிக்கையை கொடுத்து அவர்களை உலகு எங்கும் பரவ செய்து எமது மேன்மையை இயம்ப வழி வகுக்கும்.

[poll id= “2”]