பிரான்ஸ் திரைபடத்துக்கு எதிர்ப்பு,மன்னிப்பு கேட்ட Netflix

199

பிரான்ஸ் திரைப்படமான “Cuties” சிறுவர்களை தவறாக சித்தரிப்பதாகவும்,படத்தின் காட்சிகள் மனிதர்களின் மனதில் கேவலமான எண்ணங்களை விதைப்பதாக குற்றம்சாட்டி அந்த படத்தை Netflix இலிருந்து நிக்குமாறு கோரி பல்லாயிரம் பேர் டிஜிட்டல் போராட்டங்களை முன்னெடுத்திருந்தனர்.

இந்த படமானது வீட்டை விட்டு வெளியேறும் பதினொரு வயது சிறுமி சேரும் நடன குழுவானது பணக்காரர்களின் பாலியல் அடிமைகளாக பயன்படும் ஒன்றாக மாறுவதை பற்றிய திரைகதையாகும்.இக்கதை தொடர்பில் உலகெங்கும் எழுந்துள்ள பலத்த எதிர்ப்பின் பின்னால் Netflix இப்படத்தை நீக்க முடிவு செய்துள்ளதாக தெரிகின்றது.

இந்த மாதிரி படங்களை பணக்காரர்கள் சமூகத்தினுள் கொண்டு வந்து அதனை சாதாரணமான ஒன்றாக காட்டி சமூகத்தையும் கெடுத்து தங்கள் சிற்றின்ப ஆசைகள் பசியை இலகுவாக தீர்த்து கொள்ள போடும் கபட நாடகங்களே இவை என வலிமையான எதிர்ப்புக்களை போராட்டக்காரர்கள் பதிவு செய்துள்ளனர்.

புலம்பெயர்ந்து வாழும் தமிழ் சமூகத்தின் அடுதடுத்த தலைமுறைகள் இவற்றில் சிக்காமல் வளர்ந்து கொள்வதே சிறப்பாக இருக்கும்,ஆனாலும் மேற்கத்தேய மோகத்தில் வெள்ளைக்காரர்களை விட எம்மவர்களுக்கு அதிக நாட்டம் இருப்பதும் அடுதடுத்த தலைமுறை தலைவிரிகோலமாக திரிவதிலும் தெரிகின்றது.இவற்றை நாமாக கட்டுபடுத்தும் போது நடைபெறும் பண்பாட்டு சீரழிவுகளை தடுத்து கொள்ளலாம்.