கல்லறைகளை சேதமாக்கிய குற்றச்சாட்டில் ஐவர் கைது

79


யாழ்ப்பாணம், வலிகாமம் தென்மேற்கு பிரதேச சபைக்குட்பட்ட நவாலி பகுதியில் அமைந்துள்ள
நவாலி அமெரிக்கன் சிலோன் மிசன் திருச்சபைக்கு சொந்தமான இடுகாட்டில் சில நினைவு கட்டங்கள் சேதமாக்கப்பட்ட குற்றச்சாட்டில் 5 சந்தேகநபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

நினைவுக்கற்கள் சேதமாக்கப்பட்டமை தொடர்வில் விசாரணைகளை மேற்கொண்டு வந்த மானிப்பாய் பொலிஸார் 5 சந்தேகநபர்களை கைது செய்ததோடு விசாரணைகளை தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர் என்று தெரிவிக்கப்படுகின்றது.