கொரானா அபாயத்தில் வல்லிபுர ஆழ்வார் கோவில் மூடல்,பலர் தப்பியோட்டம்,தனிமைபடுத்தலில் காந்தி

138

யாழ்.பருத்துறை- வல்லிபுர ஆழ்வார் ஆலயத்தில் சுகாதார நடைமுறைகளை மீறி அதிக பொதுமக்கள் கூடிய நிலையில், ஆலயத்தை முற்றுகையிட்ட பருத்துறை சுகாதாரசேவைகள் வைத்திய அதிகாரி பணிமனையை சேர்ந்த அதிகாரிகள் குழாம் 14 நாட்கள் கோவிலுக்குள் நுழைய தடைவிதித்துள்ளதுடன்,

சாமி காவிய ஒருவருக்கு காய்ச்சல் இருந்த நிலையில் அவருடன் சேர்ந்த சாமி காவிய 3 பேரை தனிமைப்படுத்தி ஆலயத்திலிருந்து தப்பி ஓடியவர்களை பொலிஸாரின் உதவியுடன் தேடுவதற்கு நடவடிக்கை எடுத்திருக்கின்றனர்.

கோயிலுக்கு போவது கடவுள் காப்பாற்றுவார் என்றுதான்,கோயில் போனால் கொரானா பரவும் என்றால்,கோயிலில் இருப்பவரை விட கொரானா பெரியது என்றதாகிவிடும்.கோயிலுக்கு போகாமால் வாழ முடியும் என்று கொரானாவை வைத்து கடவுள் மக்களுக்கு பாடம் கற்று கொடுக்கின்றார்.பாடத்தை சரியாக படித்து கொள்ளுங்கள்.நீங்கள் சரியாக புரிந்து கொள்ளும்வரை கடவுள் படிப்பிக்கிறதை நிறுத்தமாட்டார்.அவர் சில நேரங்களில் கொஞ்சம் கண்டிப்பான ஆசிரியர்.அப்படியே கோவில் கோபுரத்தில் உள்ள மகாத்மா காந்தியை தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்த வேண்டும்.