வரலாற்று சரிவில் GDP – Trend ஆகும் Resign Nirmala ஹேஷ்டேக்குகள் – ஒரு பார்வை

364

இது வரைக்கும் இல்லாத வகையில GDP சதவிகிதம் குறைந்து – 23 க்கும் கீழே போயிருக்குனு NSO வெளியிட்ட அறிக்கையில் பார்த்தேன்.


கடந்த வருடம் முதல் காலாண்டில் Q1, அதாவது 2019 – 2020 இல் GDP 5.0℅

Q2 இல் 4.5%

Q 3 இல் 4.7% ( NSO வின் அறிக்கையில் 4.7% ஆனால் ஒரு சில அறிக்கை, செய்திதாள்கள்ல 4.1 % என்று வெளியானது)

Q4 இல் 3.1 %

இப்போ அடுத்த நிதியாண்டு 2020 – 2021 க்கான முதல் காலாண்டில் ( Q1) GDP சதவீதம் – 23.9 % .இதே நிலைமை அடுத்த காலாண்டு வரை நீடித்தால் கண்டிப்பாக இந்தியா recession இல் தள்ளப்படும்னு பொருளாதார வல்லுநர்கள் கூறுகின்றனர்.

வாழ்க்கை ஒரு வட்டம் னு சொல்லுவாங்க.

அதே மாதிரி தான் Economy உம் ஒரு வட்டம்.

அந்த வட்டத்திற்கு பேரு தான் Trade Cycle / Business cycle னு சொல்லுவாங்க.

நா சொல்றத ஒரு வட்டம் ⭕ மாதிரி நினைச்சிகோங்க.

வட்டத்துல கீழ இருந்து போவோம்.

Depression ~ Recovery ~ Prosperity ~ Boom ~ Recession ~ Depression ~ Recovery ……

இது அப்படியே Cycle மாதிரி தொடரும்.

1. Depression :

இப்போ நமக்கு ஒரு ல்வ் பெயிலியர் வருது. என்ன செய்வோம்?

Depression க்கு போயிடுவோம். மனசு உடஞ்சு போய் சோக பாட்டு கேட்டுனு அழுதுட்டு இருப்போம். தனிமையிலேயே இருப்போம். உலகமே இருண்டு போனா மாறி இருக்கும்.

அதே போல ஒரு பெரிய போருக்கு பின்னாடி, ஒரு நாட்டில் ஏற்படும் பொருளாதார நிலைதான் depression.

தொழிற்சாலையெல்லாம் நஷ்டத்தில இருக்கும், அதனால மூடிடுவாங்க, வேலைவாய்ப்பின்மை பெருகும் ( unemployment rate),மக்கள்கிட்ட செலவு பன்ன காசு இருக்காது, பொருட்கள் அதிக விலைக்கு விச்சா வாங்க மாட்டாங்க, அதனால பொருட்களின் விலை குறையும் ( deflation) .

2. Recovery :

எப்படி நம்ம இந்த லவ் பெயிலர் ஆகி depression ல இருக்கும் போது ஒரு friend வருவான். நமக்கு கொஞ்சம் ஆறுதல் சொல்வான். அப்போ தான் நமக்கு ஒரு Hope கிடைக்கும்.

அதே Hope, depression னால பாதிக்கப்பட்ட economy க்கு கிடைக்கும். அந்த stage தான் recovery. கொஞ்சம் கொஞ்சமா தொழிற்சாலை லாம் இயங்க ஆரமிக்கும். வேலைவாய்ப்பு கொஞ்சம் பெருகும். மெல்ல மெல்ல சந்தையில் விலை உயரும். பணக்காரர்களெல்லாம் புது புது துறைகளில் முதலீடு செய்ய ஆரமிப்பாங்க.

3. Prosperity ( Full Employment)

ஒரு Hope கிடைச்சோனே நம்ம பையன் அவன் வாழ்க்கைய பத்தி யோசிக்க ஆரமிப்பான். நல்லா படிச்சு அண்ணாமலை மாதிரி IPS ஆகிட்டு, துணை தலைவர் ஆகிரனும்னு வெறி கொண்டு படிக்க ஆரமிப்பான். அப்போ அவனுக்கு எந்த வித distraction உம் இருக்காது. அவனோட Full potential தெரியும்.

அதே போல economy உம் நல்ல உற்பத்தி, நிறைய முதலீடு, நல்ல வருமானம், நிறைய வேலைவாய்ப்பு னு பாக்கவே நல்லா ஜகஜோதியா இருக்கும்.

4. BOOM ( Overfull employment)

ஒரு கம்பெனி, ஒரு துறையில முதலீடு செய்யுது. அது நல்ல Profit பாக்குது. இதை பார்தோனே அந்த துறையில இன்னும் 4 கம்பெனி முதலீடு செய்யுறாங்க. அதுவும் நல்ல வருமானம். இத பாத்து இன்னும் 40 பேரு அதுல முதலீடு பன்னா..

அந்த துறை ஒரு விவசாயம்னே வச்சிப்போம்.

ஒரு தக்காளி 5 ரூபாய்க்கு உற்பத்தி பன்றானா, அதோட விலை 7 ரூபாயா இருக்கும்.

இதே ஒரு தக்காளிய 30 ரூபாய்க்கு உற்பத்தி பன்னா, எத்தனை ரூபாய்க்கு அது விற்பனைக்கு வரும்?

அதுதான் பூம் period. வேலை இருக்கும், வேலை செய்ய ஆளும் இருக்காது. ( over employment)

இதனால விலையேற்றம், அதாவது பணவீக்கம் ( inflation ) அதிகரிக்கும்.

( இந்த inflation ஐ பற்றியே ஒரு பதிவு போட வேண்டும். என்னுடைய அடுத்த பதிவில் அதை குறித்து தெளிவாக பதிவிடுகிறேன்)

5. Recession

Recessions generally occur when there is a widespread drop in spending. Boom period இல் ஏற்பட்ட விலையேற்றம் கண்டு மக்கள் பொருள்வாங்குவதை குறைத்துவிடுவர்.

இப்போ Automobile நிறுவனத்தை எடுத்துப்போம். அதிக விலை கொண்டு உற்பத்தி செய்து ஒரு விலையுயர்ந்த காரை சந்தைக்கு கொண்டு வராங்க. மக்கள் யாருமே கார வாங்கல. அதனால காரோட விலையை குறைக்கிறாங்க. கடசியில் கார் தயாரித்த விலையை விட விற்பனை விலை கம்மியாகுது.

இதனால கார் கம்பெனி காரனுக்கு Profit இல்ல. Profit வந்தா தான் வேலையாட்களுக்கு சம்பளம் கொடுக்க முடியும். இதனால சம்பளம் தர முடியாதுனு நிறைய பேர வேலைய விட்டு தூக்குவான்.

Result – Unemployment

இப்போ நாம recession stage ல தான் இருக்கோம்.

A Prolonged period of recession leads to DEPRESSION.

அதே cycle தான்.

இது தாங்க economy cycle..

ஆனா இப்போ சொன்ன இந்த cycle க்கும், இப்ப GDP குறைஞ்சதுக்கும் நிறைய வேறுபாடு இருக்கும்.

முன்னாடியே நான் சொல்லிருப்பேன் ஒரு போரோ, அல்லது பொருளாதார நெருக்கடியோ மிகும் போது தான் Depression வரும்னு. அது எல்லாமே ஒரு Abnormal situations.

இந்த Business cycle, Normal situation களுக்கு தான் அதிகாமாக suit ஆகும்.

Manmohan singh ஆட்சி காலத்தில economy சீராக வளர்ந்து வந்த நிலையில, மோடி அரசு எடுத்த தவறான பொருளாதார கொள்கை, Demonetization, Ill implemented GST போன்ற முடிவுகளால் GDP சரிந்து கொண்டே வந்தது.

இந்த வருட ஆரம்பத்தில் automobile துறை வீழ்ச்சியால், மேலும் பொருளாதாரம் அடி வாங்கியது.

அதுக்கப்புறம் தான் கொரோனா lock down ( abnormal situation) .

இதற்கு அரசாங்கத்தின் மீது பலி போட கூடாதுனு தான் நிறைய பேரு சொல்லுவாங்க. ஆனால் ஆரம்பத்திலேயே Economy வீழ்ந்துகொண்டே வந்ததற்கு வழிவகுத்து கொடுத்த அரசாங்கத்தை எப்படி குறை கூறாமல் இருக்க முடியும்.

சரி, கேட்கும் கேள்விக்கு தான் ஒழுங்கா பதில் சொல்றாங்களா னு பாத்தா, அதுவும் இல்ல.

Mam, why there is slowdown in Automobile sector னு கேட்டா,

Millenials are using Ola Ubers, hence there is a slowdown in automobile sector.

What’s the reason behind Onion & Garlic price hike? And what are the measures taken by FM to tackle it ? னு கேட்டா

I’m not eating onion & garlic.

இதெல்லாம் ஒரு பேச்சா நிம்மி மாமி னு தான் கேக்க தோணுது.

இதனால #resign_nirmala hashtag தப்பு இல்ல. நாமலும் resign பன்ன சொல்லி trend பன்னாலாம்னு தான் தோணுது.

இதுக்கான காரணங்களை கடவுள் மேல போடாம வாங்குற சம்பளத்துக்கு ஒழுங்கா வேல பாருங்க நிம்மி.

இதற்கு தான் helicopter money, direct cash transfer போன்ற பல விடயங்களை வல்லுநர்கள் முன்வைக்கின்றனர்.

மக்களின் கைகளில் பணம் இருந்தால் = செலவு செய்வாங்க = Purchasing power of people அதிகமாகும் = பணம் சுழலும் = Economy will kick start.. இது தான் நிறைய பேரின் வாதமாக உள்ளது.

GST வரியை குறைக்க வேண்டுமென்றும் சொல்லிவந்துகிட்டு தான் இருக்காங்க.

அப்படி னா இப்போ recession ல இருந்து மீண்டு வர தீர்வே இல்லையா?

எப்பவுமே ஒரு பெரிய சம்பவம் நடக்கும்போது பொருளாதாரம் அடி வாங்கி தான் ஆகும்.

முதல் உலக போருக்கு பிறகு economy பலமான அடி வாங்கியது. New Deal என்ற ஒரு விடயத்தை கொண்டு வந்து அடித்தளத்திலிருந்து பொருளாதாரத்தை திருத்தம் செய்தார் FDR. இன்றும் அதில் ஒன்றான 6- 8 hrs working day தான் follow செய்யபடுகிறது.

இரண்டாம் உலகப் போருக்கு பிறகு United Nations ( UNO) பிறந்தது.

அதே போல தான் COVID க்கு பின் நிறைய மாற்றங்கள் நம்மை வரவேற்க காத்திருக்கின்றன. அதற்கு நாம் தயாராக இருக்க வேண்டும். நம்மை அதற்கேற்றாற்போல் adopt செய்து கொள்ள வேண்டும்.

96 ல சொல்ற மாதிரி,

மாற்றங்கள் வினா

மாற்றங்களே விடை!

நன்றி🙏💕