ஐநா முன்றலில் ஓயாத அலைகள்!

159

தாயகத்திலிருந்து எந்த பிரதிநிதிகளும் கலந்துகொள்ள முடியவில்லை.

லண்டன் கனடா போன்ற நாடுகளில் இருந்தும்கூட யாரும் சென்று பங்கு பற்ற முடியவில்லை.

ஏன் சுவிஸில் இருந்துகூட குறிப்பிட்ட எண்ணிக்கைக்கு மேல் மக்கள் சேர்வதற்கு அனுமதிக்கப்படவில்லை.

கொரோனோவின் இத்தனை அச்சுறுத்தலுக்கும் நெருக்கடிகளுக்கு மத்தியிலும் தமிழ் மக்கள் நீதி கோரி ஜ.நா முன்றலில் குரல் எழுப்பியுள்ளனர்.

எத்தனை வருடமானால் என்ன? இதுவரை நீதி கிடைக்காவிட்டால் என்ன? ஆனாலும் நீதி கிடைக்கும்வரை ஓயமாட்டோம் என்பதை காட்டியுள்ளனர்.

கடல் கடந்து போனாலும் தம் உறவுகளுக்காக அடுத்த சந்ததியும் குரல் எழுப்ப தயங்காது என்பதைக் காட்டியுள்ளனர்.

போராட்டம் ஒருபோதும் தோல்வியைத் தருவதில்லை. ஓயாத இவர்கள் போராட்டம் நிச்சயம் ஒருநாள் வெற்றியை பெற்றுக் கொடுக்கும்.

இது உறுதி.

Balan C