Gmail சேவையில் பாதிப்பு,பல நாடுகளில் குழப்பம்!

196

கூகிள் செயலியின் மின்னஞ்சல் சேவையான Gmail சேவையில் ஏற்பட்டுள்ள குழப்பங்கள் காரணமாக இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் Gmail பயன்படுத்தும் மக்கள் பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ளனர்.இன்று காலையில் இருந்து ஏற்பட்டுள்ள இத்தகைய பாதிப்புக்களால்,ட்விட்டரில் தமது பிரச்சினைகளை பதிவிட்டு வருகின்றனர்.

இது தொடர்பாக கருத்து தெரிவித்த கூகிள் நிறுவனம்,தமது செயலிகள் சிலவற்றில் குழப்பம் ஏற்பட்டுள்ளதுடன்,அவற்றை நிவர்த்தி செய்யும் வேலைகளில் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.