ஆபத்தான நாடுகள் பட்டியலில் ஶ்ரீலங்கா – கோட்டாவின் அதிகார பசி

3883

இலங்கை அரசாங்கம் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கையை மறைத்து வருவதுடன் தேவையான அளவுக்கு பரிசோதனைகளை நடத்துவதில்லை எனவும் ஆபத்தான நாடுகள் பட்டியலில் எமது நாடும் இடம்பிடித்துள்ளதாக தாதியர் தொழிற்சங்க செயற்பாட்டாளர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

ஸ்ரீலங்கா அரசாங்கம் சில பிரதேசங்களை திருட்டுத்தனமாக மூடி விட்டு கொரோனா வைரஸ் பரவலின் இரண்டாவது அலையை மறைக்க முயற்சித்து வருகிறது.ஒரு புறம் அரசாங்கம் பிரதேசங்களை மூடுகிறது. தேவையான அளவுக்கு பரிசோதனைகளை செய்வதில்லை. உலக சுகாதார அமைப்பின் ஆலோசனைகளை பின்பற்றுவதில்லை. அரசியல்வாதிகள் தமக்கு தேவையான வகையில் தான் செயற்பட்டு வருகின்றனர்.

பிரித்தானியா பயண கட்டுப்பாடுகளை நீக்கிய நாடுகள் பட்டியலில் ஸ்ரீலங்கா இல்லை. அடுத்ததாக அமெரிக்க ஆபத்தான நாடுகள் பட்டியலை வெளியிட்டது. அந்த பட்டியலில் ஸ்ரீலங்கா உள்ளது. இதிலும் பரஸ்பர முரண்பாடுகள் உள்ளன.

தேர்தல் அரசியலுக்காக மக்களை கொரானவுக்கு பலியிட கொஞ்சமும் தயங்காத கோட்டா அரசு,வெளிநாடுகள்,உலக ஸ்தாபங்கள் கொண்டுள்ள விதிமுறைகளையும் பின்பற்றாமல்,இராணுவத்தை நிறுத்தி தோட்டாக்களால் எல்லாவற்றையும் வெற்றி கொள்ள முடியும் என்று நம்புவது சிறிலங்காவை சீனா குழியில் தள்ளி மூடும் ஆபத்தை கொண்டுள்ளது.