சர்ச்சைக்குரிய இலங்கை மத்திய வங்கியின் பிணைமுறிகள் விற்பனையில் நிகழ்ந்ததாகக் கூறப்படும் மோசடி தொடர்பாக தன்னிடம் இருக்கின்ற தகவல்களை அம்பலப்படுத்தினால் கோட்டா-மஹிந்த தலைமையிலான அரசாங்கத்தில் இருக்கின்ற தரப்பினர் தன்னிடம் கோபித்துக் கொள்வார்கள் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
பிணைமுறி மோசடிகள் குறித்து தன்மீது எந்தவொரு குற்றச்சாட்டும் இல்லை என்று தெரிவித்துள்ள முன்னாள் பிரதமரான ரணில் விக்கிரமசிங்க, தேவையென்றால் சட்டமா அதிபர் வழக்கு தொடர்ந்து நீதிமன்ற விசாரணைக்கு வழியேற்படுத்திக்கொடுக்க முடியும் என்றும் கூறியுள்ளார்.
ரணில் – மைத்திரி ஆட்சியின் போது மைத்திரி, கோட்டா-மஹிந்த மீது நடவடிக்கைகள் எடுக்க முயன்ற போதெல்லாம் ரணில் தடுத்து இவர்களை காப்பாற்றியமை குறிப்பிடதக்கது.ரணில் சிறிலங்கா சிங்களவர்களுக்கோ அல்லது தமிழர்களுக்கோ இதுவரை உண்மையாக இருந்ததில்லை,அந்தந்த நேரத்துக்கு ஏற்றவாறான ஒரு அரசியல் போக்கை கடைபிடித்து குட்டையை குழப்பி மீன்பிடிப்பதே அவரின் வழக்கம்.இப்போது கோட்டா-மஹிந்த அரசு மேற்கொள்ளும் வழக்குகளில் இருந்து தப்பிக்க சிங்கள தேசத்தை பிரிவினைக்குள் தள்ளுகிறார்.அது அவரின் புத்தி.. இந்த சிங்கள தேச உட்சண்டைகளுக்கு இடையில் தமிழர்களுக்கான தீர்வுகளை முன்னெடுக்காமல் அதற்கு விளக்கு பிடிக்க சில தமிழ் அரசியல்வாதிகள் ஆர்வமாக உள்ளமையும் குறிப்பிடதக்கது.