சுகம் வரும் ஆனால் ஆள் தப்பாது! சிங்கள பேரினவாதம் முனுமுனுப்பு! கோட்டாவின் கொதிப்பு!

174
சிறிலங்காவில் 40 வருட இன ஒடுக்குமுறை கடந்த 2009 தமிழர் தரப்புக்கு எதிராக உலக நாடுகளுடன் சேர்ந்து நடாத்தப்பட்ட இனப்படுகொலை,ஆயுத மெளனிப்புக்கு பின்னரான காலபகுதியில்,ஆட்சியிழந்த ராஜபக்ச குடும்பம்,ஈஸ்டர் குண்டுவெடிப்பின் தொடர்ச்சியாக எழுந்த சிங்கள மக்களின் பாதுகாப்பு பற்றி கேள்விக்கு தங்களை தாங்களே தீர்வாக அறிவித்து பெரும்பான்மை சிங்கள மக்களின் ஆதரவுடன் மீண்டும் தன்னை முடிசூட்டி கொண்டது.தமிழர்களின் விடுதலை போராட்ட பின்னடைவுகளை தொடர்ச்சியாக தமக்கு சாதகமாக கையாண்டு வரும் சிறிலங்கா அரசியல்,சிறிலங்கா நாட்டினுள் உள்ள பெரும்பான்மை சிங்கள மக்களுக்கும் அதை வைத்தே போக்கு காட்டி வந்துள்ளது.
காலங்கள் கடந்து வந்துள்ள நிலையில்,தாம் நிலைபெற இவர்கள் வளர்த்துவிட்ட சிங்கள பேரினவாத சிந்ததனைகளே இவர்களை அலைகளாக எழுந்து மூழ்கடிக்கும் ஏது நிலைகள் வெளி வர தொடங்கியுள்ளன.இதனால் அதிர்ந்து போயுள்ள இவர்கள் தங்களின் உண்மை முகங்களை அவ்வவ்போது சிங்களவர்களுக்கு காட்டிவருகின்றனர்.இதனால் சிங்கள மக்களிடத்தில் இவர்களுக்கான எதிர்ப்பு உள்ளுக்குள் அதிகரித்து தொடங்கியுள்ளது.சிங்கள இராணுவம் படுகொலை மனநோயாளிகளை அதிகாரிகளாக கொண்ட ஒரு வன்முறை கூட்டமாகும்.
சிங்கள இராணுவம் ஜேவிபிக்கு எதிரான கலவரங்களில் சிங்கள இளைஞர்கள் யுவதிகளையே முதன் முதலில் வேட்டையாடி ஏப்பம் விட்டுவிட்ட பின்னரே தமிழர்களை குறி வைத்தது.பின்னர் எழுந்து தமிழர்களின் தடுப்பாயுத போராட்டங்களை சிங்கள தேசியத்துக்கு எதிரானதாக காட்டி,இராணுவம் மேல் இருந்த சிங்கள இரத்த கறையை போக்கி கொண்டதுடன் சிங்களவர்களை தமிழர்களுக்கு எதிராகவும் முழுதாக திருப்பிவிட்டது.யாழ்ப்பாணம் எங்கே இருக்கின்றது? எப்படி இருக்கும் என்று பெரும்பான்மையான சிங்களரவர்களுக்கு தெரியாததை தமக்கு சாதகமாக்கி தமிழர்களை அரக்கர்களாக சித்தரித்து சிங்களவர்கள் மனதில் பதிய வைத்தது.
இன்று இவர்களின் தனிப்பட்ட,அரசியல் இலாபம் கருதி செய்யப்பட்டவை எல்லாம் சேர்ந்து இவர்களையே அழிக்குமளவுக்கு விஷ்பரூபம் எடுத்துள்ளது.இதை கண்டு கொதிப்படைந்துள்ள இவர்கள்! தங்களின் உண்மை முகத்தை சிங்களவர்களுக்கு காட்ட தொடங்கியுள்ளனர்.அண்மையில் பொதுக்கூட்டத்தில் பேசிய சிறிலங்காவின் சனாதிபதியும் இனபடுகொலை போர்குற்றவாளியான கோட்டபாய ராஜபக்ச! தனக்கு இரண்டு முகம் உள்ளது என்றும்,ஒன்று நல்லது என்றும் இன்னொன்று உள்ளது! அது கொடுரமாக இருக்கும் என்றும் அவருக்கு எதிராக திரும்பயுள்ள சிங்கள பேரினவாததுக்கு எச்சரிக்கை விடுக்கும் தொனியில் பேசியுள்ளார்.அத்துடன் புலிகளின் தலைவர் பிரபாகரன் தனக்கு கொழும்பில் வந்து குண்டு வைத்து தொடக்கி வைத்தார்.தான் நந்திகடல் களப்பு சென்று அவரை கொண்டு வந்தேன் அதேதான் எம்மை யார் எதிர்த்தாலும் நடக்கும் என்று நக்கல் கலந்த எச்சரிக்கை பாணியில் கூறியுள்ளார்.
இந்த அதிர்ச்சி கனவுலகில் வாழ்ந்து வரும் சிங்கள மக்கள் சிறிதாக எழ வைத்துள்ளது.அவர்கள் இவர்களை அடையாளம் காண தொடங்கியுள்ளனர்.நடுநிலை சிங்கள மக்களின் கருத்துக்களின் படி கோட்டா இராணுவ மேதையாக இருக்கலாம் ஆனால் இவருக்கு அரசியல் 1% கூட தெரியவில்லை,தனது சிங்கள அரசியல் எதிரிகளை எவ்வாறு கையாளுவது என்று தெரியவில்லையா என்று கேள்வி எழுப்பியுள்ளனர்? அது போக சிங்கள் மக்களின் பிரதிநிதிகளாக இருந்தாலும் தன்னை எதிர்த்தால், பிரபாகரனை போன்றுதான் கையாளுவார் என்று கோட்டபாய எச்சரிக்கை விடுத்தமை ஒன்றே போதும் தமிழர்களின் விடுதலை போராட்டம் பற்றி சிங்கள மக்களுக்கு உண்மை நிலை தெரிய! நாட்டுக்காக சிந்திப்பவர்கள் சிங்கள தரப்பில் சிந்திக்க ஆரம்பித்துள்ளார்கள்! சுகம் வரும் ஆனால் ஆள் தப்பாது!