பாகுபலியும் திரைப்பட கருத்து திணிப்புக்களும்

67

திரைப்படங்களில் பொதுவாக எந்தக் காட்சியையும் ஏனோதானோவென்று அலட்சியமாகவோ எதேச்சையாகவோ வைப்பதில்லை..மிகுந்த திட்டமிடல் இருக்கும்..ஒவ்வொரு சிறு சிறு காட்சியையும் செதுக்குவார்கள்..

பல விடயங்களை காட்சிகளின் மூலம் மறைமுகமாக சொல்வார்கள்..

இந்தியன் படத்தில் கையூட்டு வாங்கும் அரசு அதிகாரியைக் காட்டும் போது அம்பேத்கர் படத்தைக் காட்டுவார்கள்..இடவொதுக்கீட்டில் படித்து பதவிக்கு வந்தவர்கள் தான் கையூட்டு வாங்குகிறார்கள் என்று மறைமுகமாக சங்கர் சொல்லியிருப்பார்..

கோபி நயினாரின் அறம் படத்தில் போலியோ சொட்டு மருந்து போட செவிலியர் வருகையில் பாம்பொன்று படமெடுக்கும்..இது குறித்து கேட்டபோது போலியோ மருந்தும் பாம்பின் நஞ்சும் ஒன்று என்பதற்காகவே அந்தக் காட்சியை திட்டமிட்டு வைத்ததாக இயக்குநர் சொன்னார்..

பாகுபலியில் சிவகாமியாக வரும் ரம்யாகிருஷ்ணன் முக்கிய அரசியல் ஆலோசனைகள்..திட்டமிடல்கள் செய்யும் போதும் முக்கியமான ஆணைகளை இடும் போதும் முட்டியை மடித்து ஒரு கையை நீட்டியவாறு படத்திலுள்ளதைப் போல அமர்ந்திருப்பார்..

இவ்வாறு அமர்ந்த கோலத்தில் இருக்கும் சாமி சிலைகளை காணுங்கள்.. சாஸ்தா..ஐயப்பன்..சாத்தன்..ஐயனார் என்று பல ஊர்களில் பல பெயர்களில் அழைக்கப்படும் ஆசீவகக் கடவுள் சிலை..!

சிவகாமியால் வளர்க்கப்பட்ட சகோதரர்களுக்கிடையிலான அதிகார சண்டைதான் பாகுபலி படத்தின் கதை..!

ஆசீவகத்தால் வளர்த்தெடுக்கப்பட்ட வணிகக் குடிகளான செட்டி-பனியாக்களின் அதிகார சண்டைதான் பாகுபலி படம்..

பாகுபலி வெல்வதைப்போல கதை முடியும்..உண்மையான கதையில் பாகுபலியின் அண்ணன் பரதன்தான் வென்றான்..பாகுபலி வெல்வதைப் போல ஏன் கதையமைத்தார்களோ தெரியவில்லை..

அண்ணன் பரதனிடம் சொத்து சுகம் நாட்டை விட்டுவிட்டு தந்தையைப் போல சமணத் துறவியாகி சரவணபெலகோலாவில் அம்மணமாக நிற்கும் அந்த பாகுபலிக்கே வெளிச்சம்..!

நன்றி ஆரல்கதிர் மருகன்