பிரிட்டிஷ் கார்டியன் பத்திரிகையில் ஈழம் : விளக்கம் கோரிய சிறிலங்கா

83

பிரிட்டனின் புகழ்பெற்ற பத்திரிகை ஒன்றான கார்டியனில்,சுற்றுலாதுறை பற்றி கேள்வி ஒன்று தொடர்பாக தமது எதிர்ப்பை வெளியிட்டுள்ள சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு விடுத்துள்ளது,மேலும் பத்திரிகை எடிட்டருக்கு எழுத்து மூலமான வேண்டுகோள் விடுக்கப்பட்டு குறித்த விடயங்கள் தற்போது நீக்கப்பட்டுள்ளன

கார்டியன் இணையத்தில் சுற்றுலா தொடர்பான கேள்வி ஒன்றின் போது “ஈழம்” என்பது எந்த ஒரு புகழ்பெற்ற சுற்றுதள நாட்டின் ஆரம்பகால பெயராகும்” என்று கேள்வி கேட்க்கபட்டிருந்தது.அதில் விடைகளில் ஒன்றாக சிறிலங்கா பெயர் குறிப்பிடப்பட்டிருந்தது.சிறிலங்கா விடையை தெரிவு செய்யும் போது,சிறிலங்காவின் அண்மைய புரட்சிகர இயக்கம் என விடுதலை புலிகள் பெயர் போடப்பட்டிருந்தது.

இவை குறித்து உடனடியான அதிருப்தியை வெளியிட்ட சிறிலங்கா,கோரியதையடுத்து அந்த பதிவுகள் நீக்கப்பட்டுள்ளன.

இனவாத சிங்களவர்கள் தமது மொத்த கட்டமைப்புக்களையும் ஒற்றை அமைப்பான சிறிலங்கா அரசினுள் ஒன்றிணைவதன் மூலம் தமக்கான தேவைகளையும் எதிர்ப்புக்களையும் உலகம் முழுவதும் சரியாக கையாளுகின்றனர்.ஆனால் தமிழர்கள் உலகம் முழுதும் வாழ்ந்தும்,எதுவும் செய்ய முடியாதவர்களகவும்,ஒற்றை கட்டமைப்புக்குள் பொருந்தி வாழ முடியாதவர்களாகவும் கண் போன போக்கில் நூறு அமைப்புக்களை உருவாக்கி தமிழர்கள் தங்களை தாங்களே மேலும் மேலும் பிரித்து கொண்டிருப்பதிலயே கவனம் செலுத்துகின்றனர்.எங்கள் எதிரிகள் மிகவும் அதிஷ்டசாலிகள்,நாம் அவர்களுக்கு அதிக வேலை கொடுப்பதேயில்லை.