ஹஜியா சோபியா – நடந்தது என்ன?

158

இப்ப கொஞ்ச காலமா ஹஜியா சோபியா, துருக்கி, எர்டோகன் னு பல கேள்விபடாத பேரு காதுல விழுந்த வண்ணம் இருக்கு…

ஆமா… இவங்களா யாரு..

இவங்களாம் யாரு வேணா இருக்கட்டும். இவங்கள பத்தி நாம ஏன் தெரிஞ்சிக்கனும்.

Turkey ல நடக்குற விடயத்த பத்தி துருக்கி மக்கள் தானே கவல படனும், அதனால இந்தியாக்கு என்ன லாப நஷ்டம்?

சின்ன வயசில ஸ்கூல் படிக்கும்போது நம்ம ஒரு விஷயத்தை கத்துகிறத வச்சு நம்ம வளர்ச்சிய பெரும்பாலும் ஒப்பிட மாட்டோம். மத்தவங்கள விட நாம ஒசத்தியானு தான் எப்பவுமே பாப்போம். அதுக்கு ஒரு சிறந்த உதாரணம் தான் ranking system.

அதே போல தான் மத்த நாடுகள பத்தி நாம படிக்கும்போது, அவங்களோட நம்ம நாடு எவ்வளவு மேன்மை வாய்ந்தது. அவங்கள விட நமக்கு எவ்வளவு சுதந்திரம் இருக்குனு தெரிஞ்சிக்க முடியும்…

சரி. இப்போ நாம நீயூஸ்குள்ள போவோம்.

நாம சர்வாதிகாரி ( dictator ) கள 2 விதமாக பிரிப்போம்.

1. Hitler வகையறா dictator.

அதாவது நான் தான் எல்லாமே னு நினைச்சு. தன்னோட நாட்டோட வளர்ச்சிய பத்தியோ மக்கள பத்தியோ யோசிக்காம. மத்தவனயும் எனக்கு அடிபணிய வைக்கனும்னு ஒரு சூர போத கொண்டு, வெறி கொண்டு மத்த நாடுகளின் மேல போர் தொடுக்கிறது போன்ற விஷயங்கள செய்வது இதில் அடங்கும்.

2. Ataturk வகையறா dictator.

இவங்கள benevolent dictators னு சொல்வோம். அதாவது என்னதான் மக்கள கட்டுபடுத்தி சர்வாதிகாரியா தான் விளங்கினாலும், தன்னோட நாட்ட வளர்ச்சி பாதைக்கு கொண்டு போறவங்க. தன் நாட்டு மக்கள் கஷ்டப்படக்கூடாது, ஆனா தன் பேச்சயும் கேக்கனும்னு நினைக்கிறவங்க. இவங்கள தான் நாம benevolent dictators னு சொல்வோம்.

அந்த benevolent dictators ல ஒருத்தர் தான் Ataturk.

முதல் உலகப் போரின் முடிவின் போது Ottaman Turks களோட பிடியில இருந்த துருக்கி, நம்ம Ataturk கைகள்ல சிக்குது.

அவரு பயங்கரமா தன்னோட நாட்ட develop பன்றாரு.

இந்த இடத்தில நம்ம இன்னொரு concept ah பத்தி தெளிவா புரிஞ்சிகனும்.

Secularism ~ separation of religion from political, economic, social and cultural aspects of life.

அதாவது மதம் என்பது ஒருவரின் தனிப்பட்ட ( personal ) விடயம். ஆதலால் அதை அரசியல் மற்றும் சமூகத்தில் கலக்காதிருப்பதற்கு பெயர் தான் Secularism.

இந்த secularism ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு வகையா இருக்கு.

இந்தியா மற்றும் US இல் நாம் மதத்தை மற்றவர்களிடம் துணிக்க கூடாது. ஆனால் பிடிச்சவங்க எந்த மதத்தை வேணாலும் பின்பற்றலாம். அதே போல அவங்க தன்னோட மதம் சம்பந்தப்பட்ட விடயங்கள பொது இடங்களிலும் பின்பற்றலாம். உதாரணத்திற்கு கயிறு கட்டுவது, இஸ்லாமிய பெண்கள் படுதா போட்டு போவது. அதற்கு எந்த வித தடையும் இல்லை.

ஆனா இதே France இல் தடை விதிக்கப்பட்டுள்ளது. பிரான்ஸில் படுதா உடுத்தி பெண்கள் வெளியே செல்ல அனுமதி இல்லை. Religion என்பது உன் வீட்டுக்குள்ள தான், அது உன் தனிப்பட்ட விஷயம். அதை பொது இடங்களில் தான் கிருத்துவனென்று, இஸ்லாத்தை சார்ந்தவெனென்று வெளிகாட்டகூடாது .

இது தான் France இல் உள்ள Secularism. இதே போல் துருக்கியிலும் அமல்படுத்தினாரு Ataturk.

மேலும் சட்டத்தையே புதுசா வடிவமைக்கிறாரு.

யாரும் மதத்தை சார்ந்து அரசியலில் ஈடுபடக்கூடாது. அப்படி யாராவது ஈடுப்பட்டால், உடனே அந்த ஆட்சியை தூக்கி எறிந்துவிட்டு வேறு ஒரு ஆட்சியை உருவாக்க மிலிட்டரி க்கு நிறைய முழு power கொடுத்திருந்தாரு.

அப்போ தான் அவரு செய்ற ஒரு விடயம், ஹஜியா சோபியா என்னும் ஒரு மசூதியை (mosque) ஒரு Museum ah ஆக்குறாரு.

அப்றம் பின்னாள்கள்ல 1950 ல Arturo மரணம் நிகழுது. அதன்பின் உலகத்திலுள்ள எல்லா இடங்களை போல துருக்கியிலும் மக்களாட்சி முறை நடைமுறைக்கு வருது.

Turkey யோட மக்கள் தொகை பற்றி பாத்தோம்னா அதுல 90 % க்கும் மேல் இஸ்லாத்தை சார்ந்த மக்கள். அதனால அவங்க repeated ah ஒரு Muslim அதிபரையே தேர்ந்தெடுத்து கொண்டு இருந்தாங்க. அப்படி முஸ்லிம் அதிபரை தேர்ந்தெடுப்பது தப்பில்ல. ஆனா அவங்க இஸ்லாம் என்னும் மதப்போர்வை போத்தி கொண்டு அரசியல் செஞ்சு வந்தாங்க.

தன் நாட்டோட Secularism ah குழைக்கும் வகையில் எந்தவொரு ஆட்சி நடந்தாலும் அதை தகர்தெரிய முழு அதிகாரத்தை மிலிட்டரியிடம் Arturo ஒப்படைத்தாருனு நாம ஏற்கனவே பார்த்தோம். அதே போல இந்த ஆட்சியையும் மிலிட்டரி வந்து காலி பன்னாங்க.

தொடர்ந்து 1960, 1971, 1980, 1997 கள்ல துருக்கி ஆட்சி மிலிட்டரியால கலைக்கப்பட்டது.

Erdogan

Erdogan நம்ம அரவிந்த் கெஜ்ரிவால் மாதிரி மக்களோட மக்களா இருந்து 1990 ல மேயர் தேர்தலில் போட்டியிட்டு Mayor ஆவராரு. அங்குள்ள மக்களின் தண்ணி பிரச்சினை, கரென்ட் பிரச்சினை னு எல்லாத்தையும் தீர்த்து வைக்கிறாரு. இது அவருக்கு அங்குள்ள மக்களின் மத்தியில ஒரு நல்ல பெயரை வாங்கி தருது. அதோட 2001 ல தனக்குனு ஒரு கட்சிய ஆரம்பிக்கிறாரு.

Justice and Development Party ( AK party னு இது அழைக்கப்படுது)

2002 ல நடந்த election ல Erdogan ஜெயிச்சு Prime Minister ஆவராரு.

Erdogan ஆரம்பத்தில ஒரு நல்ல ஆட்சியாளர். ஆரம்பத்தில இருந்தே மக்களுக்கு நல்ல பணியாற்றினாரு.

தன்னோட சமூகத்தில உள்ள minority மக்களான கிறுத்துவம், Kurd, மற்றும் Jews வச்ச கோரிக்கை அனைத்தையும் நிறைவேற்றுனாரு.

இது மட்டுமில்லாம அவரு துளியளவும் அரசியலில் மதச்சாயலை கலக்கல. அரசியல் வேறு, மதம் வேறு னு ஒரு தெளிவான சித்தாந்ததை பின்பற்றினாரு.

அவரோட Period ல பொருளாதாரமும் பெருமளவு வளர்ச்சி கண்டது.

இதுவே அவரு 2007 இல் நடந்த தேர்தலிலும் வெற்றி பெற வழிவகுக்கிறது.

அதிலும் சிறப்பா பணியாற்றி 2011 இல் நடந்த தேர்தலிலும் Erdogan வெற்றி பெறுராரு.

பின் 2014 தேர்தலிலும் வெற்றி பெற வேண்டுமென்ற ஆசை Erdogan மனதில் வளர்ந்தது. ஆனால் அதற்கு சட்டம் இடம்கொடுக்கல.

அமெரிக்க தேர்தல்கள்ல பாத்தோம்னா, ஒருவர் இரண்டு முறைக்கு மேல தொடர்ந்து அதிபர் பதவிக்கு நிற்க முடியாது. அதனால தான் Obama 2016 தேர்தலில போட்டிபோடல.

அதே போல துருக்கியிலும் தொடர்ந்து 3 முறைக்கு மேல ஒருத்தர் Prime Minister ஆக முடியாது.

இதனால Erdogan என்ன பன்னாரு..

Prime Minister election ல தானே நிக்க கூடாது னு சொன்னிங்க. ஆனா President electionல நிக்கலாமேனு 2014 இல அவரு Turkey President ஆவராரு.

அதே சமயம் அதே Prime Minister தேர்தல்ல தன்னோட அபிமானிய நிறுத்தி வைக்கிறாரு.

பொறுப்பு க்கு வந்த பிறகு Prime Minister ஓட பவரை எல்லாம் President க்கு மாத்தும் வகையில் சட்ட திருத்தம் பன்னாரு.

நம்ம முன்னாடியே பாத்துருப்போம், Turkey ஓட சட்ட அமைப்பில யாராச்சு எதாச்சு மாற்றம் கொண்டு வந்தாங்கனா, துருக்கி மிலிட்டரி அந்த ஆட்சிய தகர்த்தெரியும்னு. அதே போல மிலிட்டரி 2016 ல Erdogan சட்டத்தை மாற்றினனால, அவரோட ஆட்சிய தகர்தெரிய மிலிட்டரி படை தயாரானது.

ஆனா, அதுக்குள்ள Erdogan ஆதரவாளர்கள் எல்லாம் மிலிட்டரி க்கு எதிரா வீதிக்கு வந்து போராட ஆரமிச்சிடாங்க. பீரங்கி வண்டி மேல ஏறி நின்னு AKP கட்சி கொடிய பிடிச்சிட்டு இருந்தாங்க.

இதனால மிலிட்டரி திரும்பி போயிடுச்சு.

இதெல்லாம் பாத்தோனே Erdogan மனசில ஒரு பயம் வந்துருச்சு. ஆகா இனிமேலும் நல்லவனா இருந்தா நம்மல வாழ விடமாட்டானுங்க.

அதிகாரம் கை நழுவி போகிடும் னு உணர்ந்த Erdogan, மொத்த அதிகாரத்தையும் தன் கையில் வருமாரு ஒரு விஷயம் செய்தாரு.

Prime Minister பதவிய முற்றிலும் தூக்கினாரு. இனிமேல் துருக்கி ல ஒரே ராஜா தான், அது President தான். அது நான் தான் னு அதிகார போதையில மிதந்தாரு.

ருசி கண்ட பூனை இனிமே அத விடாதுனு சொல்ற மாதிரி அதிகார ருசி கண்ட Erdogan அத தக்க வச்சிக்க எந்த extreme க்கும் போக துணிஞ்சாரு.

2018 ல நடந்த President தேர்தல்லயும் Erdogan ஜெயிச்சி வராறு. ஆனா இவரு ஏமாத்தி தான் இந்த தேர்தல்ல ஜெயிச்சாருனு ஒரு பக்கம் சொல்லி வராங்க.

இவ்ளோ நாளா தன்னோட பவர தக்கவச்சிகிறது எப்படி னு மட்டுமே யோசிச்ச Erdogan தன்னோட நாட்ட கண்டுக்காம விட்டாரு. இதனால turkey யோட unemployment rate எகிருச்சு, பணவீக்கம் ( inflation) நாளுக்கு நாள் அதிகமாகிட்டே போய் 10 % சதவீதத்தையும் தாண்டியது.

ரைட்டு…

இனிமே இவர நம்பினா வேலைக்கு ஆகாதுனு உணர்ந்த துருக்கி மக்கள் Erdogan ஐ எதிர்த்து குரலெழுப்ப தொடங்கினர்.

இதுவரை க்கும் மக்களோட பிரதிநிதியாக ( representative) இருந்த Erdogan இப்போ சர்வாதிகாரியாக ( dictator) ஆக மாறினாரு.

தன்ன பத்தி அவதூறு பேசுறவன எல்லாம் ஜெயில்ல போட்டாரு. கருத்து சுதந்திரம் முற்றிலும் மறுக்கப்பட்டது.

ஆசிரியர்கள், மருத்துவர்கள் னு யாரு Erdogan க்கு எதிரா குரழெலுப்புறாங்களோ, அடுத்த நிமிடமே அவர்களோட வேலை பறிபோனது.

இன்னைக்கு உலகத்திலேயே அதிக Journalists ஜெயில்ல இருக்க நாடுனா, அது துருக்கி தான்.

சரி..

இப்போ மக்கள்கிட்ட இவ்ளோ உக்கிரமா நடந்துகிட்டோம், இனிமே நம்மல ஜெயிக்க வைக்க மாட்டாங்களே, நாளைக்கு நமக்கு ஆதரவும் வராதே னு Erdogan மக்கள மீண்டும் தன் பக்கம் இழுப்பது எப்படி னு யோசிச்சிட்டு இருந்தாரு.

இப்போ Erdogan என்ன செஞ்சிருப்பாரு…

நம்ம இந்திய அரசியல்வாதியா மாறினாரு..

அவரு மக்கள மீண்டும் தன் பக்கம் இழுக்க பயன்படுத்திய ஆயுதம்,

மதம் (religion)

இதுவரைக்கும் அரசியலையும் மதத்தையும் பிரிச்சு பாத்த Erdogan இப்போ 2 அயும் ஒன்னா கலக்க ஆரமிச்சாரு…

2018 ல நிறைய இஸ்லாமிய பள்ளிகளை கட்டுறாரு. Normal school க்கு கொடுக்குற காச விட இரண்டு மடங்கு அதிகம் செலவில இஸ்லாமிய பள்ளிகளை துறக்கிறாரு. (Imam Hatib Schools).

2019 ல நிறைய மசூதிகளை கட்ட ஆரமிக்கிறாரு…

நாடே பொருளாதார நெருக்கடியில சிக்கி தவிக்கும் போது Istanbul லயே பெரிய மசூதி ஒன்ன open பன்றாரு.

எப்படி இங்க நாடே unemployment ல சிக்கி தவிக்கும் போது, திடீர்னு ராமர் கோயில் கட்ட அனுமதி தராங்களோ, அதே போல முற்றிலுமா ஒரு விஷயத்த மறக்க வேறு ஒரு விஷயத்து மேல கவணத்த திருப்புறாரு Erdogan.

அது தான் ஹஜியா சோபியா

ஆரம்பத்தில ஒரு Church ah இருந்த ஹஜியா சோபியா, பிற்காலத்தில 1400 கள்ல Ottaman துருக்கியர்களால ஒரு Mosque ( மசூதியாக) மாற்றப்படுது. அதன் பின்னர் வந்த Arturo , அந்த மசூதியை Museum ஆக மாத்தி எல்லா மதமும் சம்மதம் னு சொன்னாரு.

இப்போ Erdogan அந்த Museum ah திருப்பி மசூதியாக மாத்திருக்காரு.



இதை எதிர்த்து உலகம் முழுக்க கண்டனம் குவிந்தாலும் துருக்கியில் மட்டும் Mixed respose ஆகவே உள்ளது.

எப்படி இந்தியால பாபர் மசூதி இடிக்கப்பட்ட போது, உலகமெங்கும் கண்டனம் குவிந்தாலும், இந்தியாவில் மட்டுமே முட்டு கொடுத்தார்களே அதே போல தான்.

இதனால கண்டிப்பாக ஒரு கலவரம் வெடிக்கலாம், வராமலும் போகலாம்.

ஆனால் பாதிக்கப்படுறது ஒரு சமானிய மக்கள் தானே ஓழிய அரசியல்வாதிகள் அல்ல.

நமக்கு இருக்கும் மதப்பற்று தான் அரசியல்வாதிகளுக்கு ஒரு பிரமாஸ்திரம். அதை வைத்து தான் காலம் காலம் நம்மல ஆட்சி செய்யுறாங்க. அதே ஆயுதத்தை தான் இப்போ Erdogan துருக்கி மேலயும் செலுத்தியிருக்கிறாரு.

இனிமேலாவது தெளிவோம். அரசியலில் மதங்கள் நம்பிக்கைகளை கலந்தால் அவர்களை புறக்கணிப்போம்..

நன்றி🙏💕