ஹதாராஸ் வழக்கு – இது பாலியல் வன்புணர்வு அல்ல சாதிய வன்புணர்வு

136

2012 ~ நமக்கு மறக்கமுடியாத வருடம்.

உலகம் அழிய போகுது னு ஒரு வதந்தி கிளம்பியது. நமக்கெல்லாம் அது வெறும் வதந்தியாகவே போய்விட்டது. ஆனால் நிர்பயா க்கு அது நிஜமாகிவிட்டது. அவள் கனவு கோட்டை கட்டி வைத்திருந்த உலகம், அந்த வருடத்தோடு சிதைக்கப்பட்டது.

நம்ம எல்லாத்துக்குமே தெரியும், இந்த வழக்கு அங்கு இங்கு என்று மாற்றி, இழுக்கடிக்கப்பட்டு 8 வருடத்திற்கு பிறகு நிர்பயாவிற்கு தீர்ப்பு கிடைத்தது.

அன்று டெல்லியில் ஒரு நிர்பயா.. இன்று உபி யில் ஒரு நிர்பயா.

அந்த நிர்பயா க்கு தீர்ப்பு கிடைத்தது. இந்த நிர்பயாவிற்கு?

அந்த நிர்பயாவிற்கு மக்கள் குரல் இருந்தது. மக்கள் வீதிக்கு வந்து போராட அனுமதி இருந்தது.

இந்த நிர்பயாவிற்கு ?

14 September, 2020 அம்மாவுடன் வயலில் வேலை பார்த்து கொண்டிருந்த 19 வயது நிர்பயாவை அங்குள்ள உயர்சாதியினர் நால்வரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு சிதைக்கப்பட்டு துப்பட்டா வுடன் வயலில் வீசப்படுகிறார்.

10 நாள் வரைக்கும் 1 Charge sheet, FIR னு ஒரு நடவடிக்கை கூட எடுக்கப்படல. இறுதியில் மரணம் மட்டுமே அந்த நிர்பயாவிற்கு மிஞ்சியிருந்தது.

நிர்பயா மரணித்த பிறகு அவளது வீட்டில் கிட்டத்தட்ட 100 போலிஸார் குவிக்கப்பட்டிருந்தனர். இந்த விடயத்தை உன்னிப்பாக கவனித்த India Today reporter Tanushri Pandey தன் camerman உடன் கோ படம் பானியில் களத்தில் குதித்தார்.

பெண்ணாக இருந்து பார்த்தல் தான் அது தெரியும் னு நிறைய தடவ சொல்வாங்க. அந்த வகையில் ஒரு பெண்ணுக்கு இழைக்கப்பட்ட அநீதி க்கு ஆண்கள் வரலேனா கூட பரவாயில்ல, நா இந்த விஷயத்த சும்மா விட மாட்டேனு Tanushri Pandey நேரடியாக நிர்பயா உடல் இருக்கிமிடத்தை கண்டுபிடித்து சென்றுவிட்டார். ஆனால் அங்கு சரியாக காலை 2.30 மணிக்கு அவசர அவசரமாக நிர்பயா வின் உடலை எரித்து கொண்டிருந்தார்கள்.

இதை உன்னிப்பாக கவனித்த Tanushri Pandey நேரடியாக சென்று போலிஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அந்த வீடியோ இந்தியா முழுவதும் வைரல் ஆக போராட்ட அலை எழ ஆரமித்தது.

இதையடுத்து எதிர்கட்சி சார்பில் ராகுல் காந்தி ஹதாராஸ் நோக்கி தன் நடைபயணத்தை ஆரமித்தார். அவர் நொய்தாவில் போலிஸாரால் தடுத்து நிறுத்தப்பட்டு, கீழே தள்ளிவிடப்பட்ட வீடியோவும் இந்தியா முழுக்க பரவ தொடங்கியது.

இந்த இடத்தில என் முதல் கேள்விய வைக்கிறேன்.

1. ஒரு நாடு, Democratic Country ( குடியரசு நாடு) என்று அறிவிக்கப்பட்டது. அதற்கு Right to Speech என்று சட்டமும் வகுக்கப்பட்டது.

இந்த இடத்தில Protest பன்னவும், கேள்வி கேட்கவும் மக்கள் அனுமதிக்கப்படவில்லை.

அப்போ உங்க சட்டமும் ஒரு குப்பை தானா?

இந்த விடயத்துக்கு எங்கள பேச விடலேனா.. வேற எந்த விஷயத்துக்கு நாங்க பேசனும்?

ஒரு பிரதமர் வேட்பாளருக்கே இந்த நிலைமை னா…. சாதாரண மக்களை பத்தி சொல்லவே தேவை இல்லை.

அதுக்கப்புறம் உபி யின் முதல்வர் யோகி ஆதித்யநாத் இந்த வழக்கை விசாரிக்க ஒரு SIT ( Special Investigation Team) அமைக்கிறார்.

இந்த SIT direct ஆக போலிஸ் control க்கு கீழ தான் வரும். போலீஸ் direct ஆக state government control க்கு கீழ தான் வரும்.

போலிஸே காலையில 2.30 மனிக்கு எரிச்ச ஒரு கேஸ.. போலிஸே கண்டுபிடிக்கனும்னு சொல்ற கதையா தான் இருக்கு.

இதைவிட உச்சக்கட்ட கொடூரம் PR agency.

இந்த PR Agency rape eh நடக்கல னு ஒரு forensic report அ ready பன்னி அத circulation ல விட்டாங்க.

Rape நடக்கல.. கடைசியில case close ஆகிடும்.. அல்லது வேற பக்கம் divert ஆகிடும்னு என்று கனவு கண்டிருக்கலாம். ஆனால் அவங்க கனவு நீடிக்கல.

இந்த சம்பவம் social media கள்ல பரவலாக பரவி அழுத்தம் தாங்க முடியாம கடைசியில யோகி CBI investigation க்கு order கொடுக்கறாரு.

இப்போ உயர்சாதி வகுப்பை சேர்ந்த 4 பேரை accused என்று கைது செஞ்சிருக்காங்க.

இந்த 4 பேர விடுவிக்கனும்னு UP ல அவங்க சாதிய சேர்ந்தவங்க protest பன்றாங்க. அதுவும் அரசாங்க அனுமதியோட.

இந்த இடத்தில என் 2 வது கேள்வியை உங்களிடமே விட்டுவிடுகிறேன்.

இங்க நிறைய பேரோட வாதம் என்னனா,

யோகி தாக்குர் வகுப்பை சார்ந்தவர். கைதான நால்வரும் தாக்குர் வகுப்பை சேர்ந்தவர்கள். பாதிக்கப்பட்ட பெண் தலித் வகுப்பினை சார்ந்தவர். இதனால இந்த சம்பவத்தை மூடி மறைக்க தான் இவ்வளவு விடயங்கள் நடந்துள்ளது என்று கூறுகின்றனர்.

ஆனா மேல்சாதியோ கீழ்சாதியோ.. தப்பு செஞ்சவங்க தண்டிக்கப்படனும்.

இங்க டெல்லியை சேர்ந்த நிர்பயாவிற்கு நீதி கேட்க வழங்கிய சுதந்திரம் கூட உ பி யை சேர்ந்த நிர்பயாவான Manisha க்கு வழங்கபடவில்லை என்பது தான் உண்மை.

இங்கு சாதி எனும் தீ இருக்கும்வரைக்கும் நிர்பயாக்களுக்கு நீதி கிடைத்தாலும், மனிஷாக்களுக்கு அநீதி நிகழ்ந்து கொண்டே தான் இருக்கும்.

நன்றி🙏