முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் ஏற்பாட்டு குழுவினர் மீது அரச படை விசாரணை

95

சிறிலங்கா அரசின் ஏவல் படை அரச பயங்கரவாதத்தால் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலைக்கு உள்ளாக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு 11 வது ஆண்டு நினைவு வணக்கம் செலுத்தும் நாளைய நினைவேந்தல் நிகழ்விற்கு வணக்க ஏற்பாடுகள் செய்தவர்களை அச்சுறுத்த விசாரணை நடத்துகிறது!

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வினை தடுத்து நிறுத்துவதில் சிறிலங்கா காவல்துறையினரும் படைத்தரப்பினரும் தீவிரம் காட்டியுள்ள
நிலையில் சற்றுமுன்னர் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் ஏற்பாட்டுக்குழுவினர் முல்லைத்தீவு மாவட்ட காவல்துறை நிலையத்திற்கு அழைக்கப்பட்டு நினைவேந்தல் குறித்த விடயங்களை கேட்டறிந்துள்ளனர்.

முன்னதாக நினைவேந்தல் நிகழ்வை கொரோனா விதிமுறைகளைக் காரணம் காட்டி நீதிபதியின் ஊடாக தடை உத்தரவைபெறுவதற்கு முனைந்திருந்தபோதும் மாவட்ட நீதிபதி இல்லாததன் காரணத்தால் அம்முயற்சி பலனளித்திருக்கவில்லை.

இவ்வாறான நிலைளிலேயே ஏற்பாட்டுக் குழுவினர் காவல்துறை நிலையத்திற்கு இன்று நள்ளிரவு அழைக்கப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இதே வேளை முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை தடுத்து நிறுத்த காவல்துறையினர் யாழ் நீதிமன்றில் போட்ட வழக்கை,தள்ளுபடி செய்த நீதவான்,சமூக இடைவெளியுடன் கூடிய வகையில் நினைவேந்தல்களை நடத்தலாம் என்று உத்தரவிட்டுள்ளார்

இது ஒரு அப்பட்டமான மனித உரிமை மீறலாகும்! சர்வதேச சமூகத்தின் பார்வைக்கு இதனை உடன் கொண்டு செல்வோம்!