தமிழரின் ஆடுகளம்

74

பரம்பரை ‌பரம்பரையாக குறிப்பிட்ட சமூகம் மட்டுமே ஆடிக் கொண்டு இருக்கிற களம்.
ஆனால் ‌ஆடுகளத்தின் சொந்தக்காரனுக்கு அதில் ‌நீண்ட காலமாக ‌பங்கு இல்லை.
அவனுக்கும் அதில் அவ்வளவு பெரிய ‌ஆசை‌ இல்லை. காரணம் , மிகச்சிறந்த உயிர்நேய , மனித நேயம் மிக்க சாதியில் பிறந்தவர்கள். சில நேரங்களில் சேர்ந்து ‌அடிமட்ட‌ வீரனாக (?)விளையாடுவான். அங்கீகாரங்கள் கிடைப்பதில்லை. அதனால் அதிகாரம் ‌அவனுக்கு‌ எட்டாக் கனியாகவே இருந்து ‌வந்துள்ளது. அதிகாரங்கள் அவனை‌ நசுக்கும் போது தன்னை ஒரு சில போதைகளில் தன்னை மாட்டிக் கொண்டு அடிமையாக வாழப் பழகிக் கொண்டான்.

காலங்கள் ஐம்பது வருடங்களைக் கடந்து போகிறது. இரண்டு மூன்று‌ தலைமுறைகள்‌‌ அடிமட்ட இடங்களை சூடாக்கியவர்களாகவே இருந்து மாண்டு போகின்றனர். தங்களது அடையாளங்களை இழக்கின்றனர். மாண்பை இழக்கின்றனர்.

ஆனால் மூன்றாம், நான்காம் தலைமுறைகள் இவைகளை எதிர்த்து – அநீதிகளை மிதித்து எதிர் வினையாற்ற புறப்படுகின்றனர்.

பொருளாதாரம், கலை, இலக்கியம், இயற்கை ‌, எதிர்காலம் என்று அனைத்தையும் இழந்து உதிர்க்கும் நிலையில் தாங்கள் ‌யார் ? எவ்வாறு உரு‌மாற்றப்பட்டோம் ? எமது உரிமைகளை வாடகைக்கு எடுத்து இன்று உரிமம் எடுத்து ‌சொந்தம் கொண்டாடும் இவர்கள் யார் ? எங்கிருந்து வந்தார்கள் ? இவர்களின் நோக்கம் என்ன ? இவைகளை எல்லாம் ‌மனதில் கேள்விகளாக ‌பதித்து தனக்கும் – அடுத்தவரும் தலைமுறைகளுக்கும் சேர்த்து விதைகளை விதைக்கின்றான்.

விதைகள் வீரியம் என்பதால் ஐம்பது வருட‌ நாடகம் ஆட்டம் காண்கின்றது. விதைகளின்‌ வீரியம் இந்த ஐம்பது ‌வருட‌ இயற்கைக்கு ‌முரணான விருட்சத்தின் வேர்களை நிலத்திற்கு கீழே வேர் அறுத்து சாய‌ வைக்கும்.

இந்த மண்‌ – எங்களின் சொந்த மண்‌ என்று அந்த வீரியம் மிக்க இனம் தனது இறக்கைகளை அகல‌ விரித்துப் பறக்கும்.

இப்படிக்கு

தமிழன் Ramanan