கூட்டமைப்பின் தகர டப்பாக்களும் சைக்கிள் பெல்களும்…

145

தமிழரசுக்கட்சியின் இளைஞர் அணி தலைவர் சிவகரன் அவர்கள் அநியாயமாக , சுமந்திரனின் அக்கிரமத்தால் கட்சியில் இருந்து வெளியேற்றப்படும் போது, நியாயம் கதைக்காத கூட்டமைப்பின் தகரங்கள்….

தமிழரசுக்கட்சியின் சார்பில் மாகாண சபையில் போட்டியிட்டு வென்ற அனந்தி சசிதரனை அநியாயமாக, சுமந்திரனின் அக்கிரமத்தால் கட்சியில் இருந்து வெளியேற்றப்படும் போது, நியாயம் கதைக்காத கூட்டமைப்பின் தகரங்கள்…..

தமிழரசுக்கட்சி தென்மராட்சியின் முக்கிய உறுப்பினர் அருந்தவபாலன், சுமந்திரன், சஜந்தன் போன்றவர்களின் அராஜகங்கள் காரணமாக வெளியேறும் போது நியாயம் கதைக்காத கூட்டமைப்பின் தகரங்கள்….

முன்னணியின் உறுப்பினர் ஒருவருக்கு எதிராக, இழைக்கப்பட்ட குற்றத்திற்கு ஒழுக்காற்று நடவடிக்கை மட்டும் எடுக்கப்படும் போது,

இந்த கூட்டமைப்பின் தகர டப்பாக்கள் மணி அடிக்கின்றனர், பட்டம் விடுகின்றனர், ஓலமிடுகின்றனர்,

இவ்வாறே இவ்வளவுக்கு கூட்டமைப்பு பற்றியும் அதன் துரோகங்கள் பற்றியும் தங்கள் கட்சி விடயங்களை விட ஆழமாக அறிந்திருக்கும் முன்னணியினர்,தங்கள் கட்சியிள் இவ்வாறான பிரச்சினைகளை நிகழ அனுமதியளித்திருக்க கூடாது.இவை எல்லாம் நடந்து இன்று ஒருவர் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்ட பிறகும்,அவர் கட்சியில் இருந்து நீக்கப்படவில்லைதானே என்று கிரந்தம் பேசுவது பொருத்தமில்லாதது.தவிர இவற்றை மீண்டும் ஒட்ட வைத்து ஒட வைக்க நினைப்பவர்கள்,தொடர்ந்து வேலைவெட்டி இல்லாமல் பஞ்சாயத்து செய்ய போகிறார்களா?

தகர டப்பாக்கள் சத்தமும் சைக்கிள் பெல்கள் சத்தமும் ஒன்றாக இருக்க முடியாது.