வீட்டுத்தோட்டம்

254

ஒவ்வொரும் தமது வீட்டுக்கு தேவையான மரக்கறி வகைகளை தாமே தமது வீட்டு சூழலில் உற்பத்தி செய்து தமது தேவைகளை நிறைவேற்றுவதே வீட்டுத்தோட்டம் ஆகும். மேலதிகமாக கிடைக்கும் உற்பத்திகளை ஏனையோருக்கு கொடுத்து உதவலாம் அல்லது விற்பனை செய்யலாம்

வீட்டுத்தோட்டத்தின்_முக்கியத்துவம்:-

1.இரசாயனங்களற்ற மரக்கறிகளை பெறுவது
2.சுத்தமான உடன் மரக்கறிகளை பெறுவது
3.குறைந்த செலவில் உற்பத்தி செய்வது
4.இலகுவில் பராமரிக்க கூடியதாக செயற்படுத்துவது

இம்முயற்சியில் சேதன பசளைகளை பயன்படுத்தி உற்பத்தி மேற்கொள்வதாக இருக்க வேண்டும் .இதனால் போசாக்கு நிறைந்த (இரசாயன சேர்க்கைகள் அற்ற) உற்பத்திகள் மேற்கொள்ள முடியும் .மேலதிக உற்பத்திகள் பிறருக்கு வழங்குவதனால் எம் தேச மக்கள் போசாக்குடைய உணவு உட்கொள்ள வாய்ப்பாக அமையும். இவ் உணவுப்பயன்பாட்டால் எமது மக்கள் திடகாத்திரமான,நோய்களற்ற ,வலுவான மனிதவளம் கொண்டவர்களாக திகழ்வர்.

சேதன பசளைக்கான வளங்களாக பின்வருவனவற்றை பயன்படுத்தலாம் .
1.பண்ணைகழிவுகள்
2.பசுந்தாட் பசளைகள்
3.சமயலறை கழிவுகள்
4.மண்புழு போன்ற உயிரின வளங்கள்

வீட்டுதோட்டத்தின் ஒரு பகுதியாக வீட்டின் முன்புறத்தை பூந்தோட்டமாக அமைத்து இல்லறத்திற்கு அழகு சேர்த்து மனதில் புத்துணர்ச்சியுடன் கூடிய மன நிறைவை பேணலாம்.
வீட்டுத்தோட்டத்தின் அடுத்த கட்டமாக உப உணவு பயிர்ச்செய்கையை முன்னிலைப்படுத்த வேண்டும்.அதாவது குரக்கன்,சாமை,வரகு,பயறு,உழுந்து,கௌபி,சோளம் ,கடலை போன்ற பயிர்களை உற்பத்தி செய்து அவற்றையும் சேதன பசளை மூலம் உற்பத்தி செய்ய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.இவ்வாறு எமது செயற்பாடுகளை முன்னெடுத்துச் சென்று பூரணத்துவமான வெற்றி நிலையை அடைந்தால் எமது தேசம் தன்னிறைவு கொண்ட பொருளாதார வளம்மிக்க தேசமாக அமையும்.

வீட்டுத்தோட்டத்தைதிட்டமிடகவனிக்க_வேண்டியவை:-

1.வீட்டை சுற்றியுள்ள நிலத்தில் எவ்வகையான பயிர்கள் சிறந்த பலனை தரும் என அறிந்து தேர்வு செய்வது.
2.தேர்வு செய்யும் பயிர் அன்றாடம் எமது தேவைக்கு ஏற்றதாகவும்,போசனை நிறைந்ததாகவும் கிடைக்குமா என ஆராய்தல்.
*மரவள்ளி,குரக்கன், திணை,சோளம்,வத்தாளை போன்ற
காபோவைதரேற்று உடையவையை நாட்டலாமா
*கனிப்பொருட்கள் உயிர்ச்சத்துக்கள் கொண்ட பழப்பயிர்கள் ,இலைக்கறிக்வகைகள் நாட்டலாமா என ஆராய்தல்
*புரத பொருட்களான பயறு,கௌபி ,உளுந்து அவரை ,துவரை போன்றன பயிரிட உகந்ததா என ஆராய்தல்
*வாசனைப்பொருட்களான இஞ்சி, மஞ்சள், கறிவேப்பிலை, றம்பை போன்றவை சிறப்பாக வளருமா என தேர்வு செய்தல்
3.வீட்டிலும் சுற்றாடலிலும் உள்ள வளங்கள் பயன்படுத்த கூடியதாக உள்ளதா கவனித்தல்
4.வருடம் முழுவதும் பலன் பெற கூடியதான பயிர்களை தேர்வு செய்தல்
5.தொடர் சுழற்சி முறை பயிராக நடுகை செய்து பயன்களை வருடம் முழுவதும் பெறலாமா என கவனத்தில் எடுத்தல்
6.கூட்டெரு வீட்டு தோட்டத்திற்கு தேவையான அளவு எடுக்கலாமா என கவனித்தல்
7.நிழலில் வளரும் பயிர்கள் சூரிய ஒளி தேவையான பயிர்கள் எவையென வீட்டு தோட்ட நிலத்திற்கேற்ப பயிரிடுவது பற்றி கவனித்தல்
8.பூமரக்கன்றுகள் எங்கு எவ்வாறு அமைப்பதென கவனத்தில் எடுத்தல்
9.நீர்த்தேக்கமற்ற சூழலில் அமைக்கும் பயிர்களை நாட்டி எவ்வாறு பயன்பெறுவதென தீர்மானித்தல்

வீட்டுத்தோட்டத்தால்பெறப்படும்நன்மைகள்:-

1.நேரங்களை வீண்விரயமாக்காது பிரயோசனமாக பயன்படுத்தலாம்.
2.எமக்கு எம்மை அறியாமலே வருமானம் கிடைப்பது மட்டுமல்லாது தேவையற்ற செலவுகள் கட்டுப்படுத்தப்படுகிறது.
3.நஞ்சற்ற எமக்கு தேவையான இயற்கை முறை விவசாய செய்கையால் தூய மரக்கறிகள் கிடைக்கும்.
4.வீட்டை சுற்றியுள்ள நிலம் வீண்போகாது பயன்படுத்துவதாக இருக்கும்.
5.தூய மரக்கறி பயன்பாட்டால் சமச்சீரான சத்துணவு கிடைப்பதால் தேக ஆரோக்கியம் பேணப்படும்.
6.எமக்கு தேவையான விருப்பம் கொண்ட மரக்கறிகளை நாட்டி பயன்பெறலாம்.
7.குடும்ப வருமானம் அதிகரிக்கும் சூழ்நிலை உருவாகும்.
8.எமது வீட்டு கழிவுகள் வீண்போகாது பயன்படுத்தி பலன்பெறலாம்.
9.அசேதன பசளை பாவிக்காது விடுவதால் மண்வளம், நீர் வளம் பாதுகாக்கப்படும்.
10.தேவைக்கேற்ப உடன் மரக்கறிகளை பறித்து சமைக்கலாம்.
11.நாமே வீட்டுத்தோட்டத்தில் பாடுபடுவதால் உடற்பயிற்சிக்கென நேரம் விரயமாக்க வேண்டிய அவசியம் இல்லை.
12.எமது தேவையை நாமே பூர்த்தி செய்வதால் எமது தேசம் தன்னிறைவு பெற்று மிளிரும்.

வீட்டுத்தோட்டம்
தற்சார்பு_பொருளாதாரம்
தன்னிறைவான_தமிழ்த்தேசம்

– பொன் மாஸ்டர்