ஜப்பான் ஹொண்டா,கற்று கொள்ள வேண்டிய வாழ்க்கை பாடம்..

128

ஜப்பானின் பிரபல ஹொண்டா மோட்டர் கம்பனி இரண்டு சக்கர வாகனங்களில் மோட்டார்பைக் உற்பத்தியில் சாதனை படைக்க நினைத்த காலம் அது.

அந்தவேளையில் ஐரோப்பாவில் பெரும் உற்சாகமும வரவேற்பும் பெற்றிருந்த மோட்டார் பைக் ரேஸ் மிக கோலாகலமாக நடக்க தொடங்கிய காலம் அது என்பதால், அந்த போட்டிகளில் எந்த பைக் அதிவேகமாக ஓடி வெற்றி பெறுகின்றதோ அந்த பைக்கை தயாரித்த கம்பனியின் பைக்களே அமோகமாக விற்பனையாகின.

ஜப்பானில் ஹொண்டா மோட்டார் கம்பனியும் தனது பைக்களை போட்டிக்காக ஐரோப்பாவுக்கு அனுப்பிவைத்தது. அப்போதைய போட்டிகளில் ஜெர்மனிய, பிரித்தானிய மற்றும் செக்கோஸ்லோவியா பைக்களே போட்டிகளில் அமோகமான வெற்றிகளை குவித்துக்கொண்டிருந்தன.

இந்த நிலையில் முதன்முதலாக ஹொண்டா நிறுவனத்தின் பைக்கள் போட்டிகளில் கலந்துகொண்டபோதும் அவை போட்டியில் ஐந்தாவது இடத்தைக்கூட பிடிக்கவில்லை என்பது அப்போது ஹொண்டாவுக்கு பெரும்தோல்விதான்.

தோல்வியை முழுமையாக ஏற்றுக்கொண்ட அந்தக்கம்பனி, அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு ஐரோப்பிய மோட்டார்பைக் போட்டிகளுக்கு தனது தயாரிப்புக்களை அனுப்பவே இல்லை. ஆனால் அந்தக்காலத்தில் பல சோதனைகளை செய்து, தோல்விகளுக்கான காரணங்களை ஆராய்ந்து பைக்கின் எஞ்ஜின்களை மாற்றியமைத்தது ஹொண்டா கம்பனி.

அதன் பிறகு நடந்த ஐரோப்பிய மோட்டர்பைக் உலகச்சம்பியன் போட்டியில் முதல் ஐந்து இடங்களையும் ஹொண்டா பைக்கள் மட்டுமே பெற்றுக்கொண்டன. ஐரோப்பிய பைக் தயாரிப்பு நிறுவனங்களின் பைக்களால் ஹொண்டாவுடன் போட்டியிட முடியவில்லை என பிரபல அமெரிக்க பத்திரிகையான டைம் செய்தி வெளியிட்டது.

முதலில் போட்டியிட்ட ஹொண்டா கம்பனி தனது தோல்வியை ஏற்றுக்கொண்டு அதை ஒரு முயற்சியாக எடுத்து அதிலிருந்து அதிவேக எஞ்ஜினை கண்டுபிடித்து வெற்றிபெற்றது என்பதை ஆழமாக கவனித்துக்கொள்ளுங்கள்.

#இனிய காலை வணக்கங்கள்