இந்தியாவில் 59 சீன app களை ban செய்து கொண்டிருந்த அதே சமயத்தில் சீன அரசு ஒரு அரசாணை பிறப்பிக்கின்றது. அதில் சீனாவிலோ, ஹாங்காங்கிலோ சீன அரசை பற்றி தவறாகவோ அல்லது கண்டித்தோ பேசினால் அவர்களுக்கு life time imprisonment ( வாழ்நாள் சிறைத்தண்டனை ) பிறப்பித்தது.
இதுல ஒரு சிறந்த விடயம் என்னன்னா, சீனாவை தாண்டி யாரு சீனாவ பத்தி தப்பா பேசினாலும், எடுத்துக்காட்டாக இந்தியாவிலிருந்து பேசினாலும் அவர்களுக்கு சிறை தண்டனை வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது சீன அரசு.
அதெப்படி தல நான் அத்திப்பட்டி ல சீனா வ கலாய்ச்சு வீடியோ போட்டா, அவன் என்ன jaila போட முடியும்? னு ஒரு கேள்வி வரலாம்.
அத்திப்பட்டி ல இருந்து tour க்கோ, Business க்கோ, இல்ல வேல பாக்குறத்துக்கோ நாம சீனா அல்லது ஹாங்காங் குள்ள போனா only incoming தான், no outgoing..
ஒரு மக்களாட்சி எப்படி இருக்க கூடாது என்பதற்கு இந்தியா எவ்வளவு சிறந்த உதாரணமோ, அதே போல ஒரு கம்யூனிச ஆட்சி எப்படி அமைய கூடாது என்பதற்கு சீனா ஒரு சிறந்த உதாரணம்.
இதில் ஹாங்காங் மக்களுக்கு மருந்து போடும் வகையில் தைவான் தன்னுடைய border களை ஹாங்காங் மக்களுக்காக திறந்து வைத்துள்ளது.
போராட்டம் தானே பன்னனும்… இங்க வாங்கயா நம்ம வீட்டுக்கு… வந்து எத்தனை போராட்டம் வேணா பன்னிக்கோங்கனு தைவான் அதிபரம்மா Tsai ing Wen ஹாங்காங் மக்களுக்கு அழைப்பு விடுக்கிறாங்க.
ஆமா, ஏன் இப்போ தீடீர்னு சில நாளா, ஹாங்காங்ல போராட்ட மயமாவே இருக்கு?
அதுக்கு நம்ம ஒரு குட்டி flashback போயிட்டு வந்துருவோம்.
1856 ல இருந்து 60 வரைக்கும் British க்கும் சீனாவிற்கும் இடையே Opium போர்கள் நடக்குது. அதுல தோத்த சீனா தன்னோட ஒரு பகுதியான ஹாங்காங்க 99 வருசம் பிரிட்டனுக்கு லீஸுக்கு கொடுக்குது. 1898 ல இருந்து lease period ஆரம்பிக்குது.
அது 1997 ல முடிவுக்கு வருது.
அந்த இடைப்பட்ட காலம் வரைக்கும் UK விடம் ஹாங்காங் இருந்தது என்பது தான் பேரு. மத்தபடி ஹாங்காங்கென ஒரு அரசு நிர்ணயித்து, ஹாங்காங் க்கு கிட்டத்தட்ட எல்லா உரிமைகளும் பிரிட்டிஷ் வழங்கியது. ஹாங்காங்யை Open Market ஆக உருவாக்கியது பிரிட்டன்.
இதானல ஹாங்காங் சீனாவை ஒப்பிடும் போது கல்வியறிவு வர்த்தகம் தொழில் அனைத்திலும் பன்மடங்கு பெருகியது.
Development development development தான்.
இப்போ நல்லா ஜாலியா சுத்திகிட்டு திரிஞ்ச நமக்கு லாக்டவுன் போட்டு உக்கார வச்ச மாதிரி…
சீனா ~ பிரிட்டன் lease agreement முடிவுக்கு வந்தது. ஹாங்காங் ஐ சீனா take over பன்னி, சீனா கட்டுப்பாடுகள் மற்றும் சட்டதிட்டங்களை ஹாங்காங் க்கு விதித்தது.
உடனே ஹாங்காங் மக்கள் போராட்ட களத்தில் குதித்தனர்.
சரி கொஞ்ச நாள் போகட்டும் என்று ஒரு Puppet அரசாங்கத்தை சீனா ஹாங்காங்கில் நிறுவியது. அந்த அரசும் சீனா சொல்வதற்கெல்லாம் தலையசைக்கும்.
ஹாங்காங் மக்கள் நிறைய படிச்சிட்டாங்க. அதனால தான் நம்மல எதிர்த்து போராடுறாங்க. இத மாத்தனும்னா நம்ம கல்விய மாத்தனும்னு ஹாங்காங் ஓட பாடத்திட்டத்தை சீனா மாற்றியது. அப்பல இருந்தே ஹாங்காங் மக்கள் தங்கள் வேலைகளை விட்டுவிட்டு தினமொரு போராட்டம் நிகழ்த்தி வருகின்றனர்.
சீனா வந்ததுக்கே ஹாங்காங் மக்கள் இப்படி போராடுறப்ப, சீனா மக்கள் இவ்வளவு காலம் அமைதியா அங்க இருக்காங்கனா…அவங்க நிலைமையை நினைச்சு கூட பார்க்கமுடியல..
இதெல்லாம் ஒரு பக்கம் ஓடிகிட்டு இருந்தாலும், அடுத்தப்படியாக பூட்டானின் பகுதி சிலவற்றை இப்போது சீனா ஆக்கிரமித்து அவங்களோட பிரச்சனை செய்துகொண்டு வருகிறது.
நான் தான் காட்டுக்கே ராஜா னு சொல்லி கொண்டு வர சீனா வின் கொட்டத்தை ஐ நா வும், அமெரிக்காவும் தான் அடக்க வேண்டும்.
நன்றி🙏