சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் இளநீரால் வந்த குழப்ப நிலை!

வைத்தியசாலையில் உள்ள தென்னைமரத்தில் பறிக்கப்பட்ட இளநீரை வீட்டிற்கு கொண்டு செல்ல முற்பட்ட பணிப்பாளரினால் யாழ் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைக்குள் குழப்பநிலை உருவாகியுள்ளது.

இச்சம்பவம், நீண்டகாலமாக நடந்து வந்த நிலையில் நேற்றைய தினம் சிற்றூழியர் ஒருவர் இளநீரை பறித்து பணிப்பாளரின் காரிற்குள் ஏற்ற முற்பட்ட சமயம் வைத்தியர் ஒருவரால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.

இதனால் கோபமடைந்த சிற்றூழியர் இளநீரை சிதற வீசியதாகவும் வைத்தியருடன் முரண்பட்டதாகவும் தெரியவருகின்றது.

தங்கள் தில்லு முள்ளுக்களை மூடிமறைப்பதற்காக இவ்வாறான சில ஊழியர்கள் பணிப்பாளரின் விசுவாசிகளாக இருக்கும் முகமாக இதுபோன்ற ஈனச்செயல்களில் ஈடுபட்டு வருவதாகவும் பணிப்பாளரும் இதற்கு உடந்தையாக இருந்து வருவதாகவும் வைத்தியசாலையின் பல்வேறு தரப்பினரால் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இதேவேளை, இச்சம்பவம் தொடர்பாக சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றும் பதியப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.