
ஒரு மனிதனின் மூளையில் எழும் எண்ணங்களும்/சிந்தனைகளும் அதிர்வுகளை தோற்றுவிக்கும் இது யாவரும் அறிந்ததே..இந்த அதிர்வுகள் வலுப்பெறும் போது அதிர்வெண்ணாக உருவெடுக்கும்..இது தான் frequency of human brain wave – இது போல ஒருத்தருக்கு மேல ஒரே மாதிரி சிந்தனையை கொண்டிருந்தால் அந்த அதிர்வெண்கள் ஒரே அலைவரிசையில் அமையும் அதாவது FM ரேடியோ போல..இது உலகில் எந்த இடத்தில் இருப்பவர்களையும் இணைக்கும்.. இது ஒரு World wide frequency modulation போல செயல்படும்.. அதாவது,உலகெங்கிலும் உள்ள ஒத்த சிந்தனையை/எண்ணங்களை கொண்டவர்களை இணைக்கும் செயல்பாடு…உதாரணத்திற்கு தற்போது உங்களுடன் நெருங்கி பழகுபவர்கள் ஏதோ ஒரு அலைவரிசையில் ஒத்து போவதன் விளைவாக தான் உங்களோடு இணைப்பில் உள்ளார்…நீங்கள் ஒரு பொருளை வாங்கனும்ன்னு நெனைக்குறீங்க ன்னு வெச்சிக்குவோம்..அப்போ உங்க மூளையில் அந்த பொருள் தொடர்பான எண்ணங்கள் சிந்தனைகள் கேள்விகள் எழத்துவங்கும் இது ஒரு அதிர்வெண்ணாக கொள்வோம்..இதே போல் அந்த பொருளின் தேவை உள்ளவரோ அதை பற்றி தெரிந்தவரோ மற்றொரு இடத்தில் எண்ணங்கள் மூலம் அதிர்வெண்ணை உருவாக்குகிறார் ன்னு வெச்சிக்கலாம்…இப்போ இந்த இருவரையும் இணைப்பது அந்த அதிர்வெண்ணின் அலைவரிசை ஒன்றிப்பு நீங்கள் அவரை தேடியோ அவர் உங்களை தேடியோ நகர தொடர்வது தான் அடிப்படை (இப்போ சொன்னது உதாரணத்துக்கு மட்டுமே)..
இந்த அலைவரிசை ஒன்றிப்பு ஈர்ப்பின் அடிப்படையில் நிகழும் பிரபஞ்ச ஈர்ப்பு – அதாவது பசும்புல்லை தேடி ஆடு செல்வது போல்…இது ஒரு அனிச்சை இயக்கம்…இதில் மேம்பட்ட நிலை தான் ஒருவரை ஒருவர் பார்க்காமலேயே அவரது எண்ணங்களை உணர்வது…உலகின் எங்கோ இரு இடங்களில் இருப்பவர்கள் யார் எவரென தெரிந்தோ/தெரியமலேயோ எண்ணங்களை பரிமாறிக்கொள்வது – இது எப்படி ன்னா குறிப்பிட்ட அலைவரிசையில் ஒருவரின் சிந்தனை(தகவல்) upload செய்யப்படும் அதே அலைவரிசையில் யார் ஒத்திசைகிறாரோ அவருக்கு அந்த தகவல் கடத்தப்படும்(download)..கடத்தப்படும் நபரின் சிந்தனையில் புதிதாக உதிக்கும் சிந்தனை போல தோன்றும் ஆனால் உண்மையில் அது வேறு ஒருவரின் கடத்தப்பட்ட சிந்தனையாக கூட இருக்கலாம்..இதில் உள்ள சிக்கல் என்னவென்றால் சரியாக அதே அலைவரிசையில் ஒத்திசைப்பது… நான் நெனச்சேன் நீ சொல்லிட்ட/இதே தான் நான் சொல்ல வந்தேன் – இது போன்ற சம்பவங்கள் லாம் இதன் அடிப்படை…சமீபத்தில் என் நண்பனுக்கும் எனக்கும் இடையில் இது போல பல விஷயங்கள் நடந்திருக்கு அவன் நினைப்பான் நான் சொல்லுவேன்…இது 90% ஒத்துப்போகும் நிகழ்வுகளாக நடக்கும்…சில விஷயங்கள் அவனது சிந்தனைகள் தான் என்னூடே தரவிறக்கம் செய்யப்படும்..எளிமையா சொல்லணும் ன்னா அவன் யோசிப்பான் நான் அதை திருடுறேன் எனக்கே தெரியாம…
இதை தான் telepathy ன்னு சொல்றாங்க..
இது போல நம் சிந்தனைகளை மற்றவர்கள் ஒத்திசைக்க கூடாது என்றால் நாம் உருவாக்கும் அலைவரிசை வித்தியாசமாக இருக்கணும்…இது எண்ணங்கள் உருவாக்கத்தில் ஏற்படுத்தும் தந்திரம்…இது போன்ற அலைவரிசை ஒன்றிப்பு ரத்த உறவுகளில் மிக சாதாரண ஒன்று தான் – உன் அப்பா போல யோசிக்குற/இதையே தான் உங்கப்பாவும் சொல்லிருப்பாரு.. இது போன்ற உதாரணங்கள் கேள்வி பட்ருப்போம்..ஏற்கனவே உடலவில் (DNA) இணைப்பில் உள்ள நாம் மனதளவில் உருவாக்கும் எண்ணங்களை பரிமாறிக்கொள்வது எளிது தான்…பிள்ளைகளின் எண்ணங்களை பெற்றோர் தெரிந்து கொள்வது தானே
உங்க சமூக வலைதள வட்டத்தை உற்று நோக்குங்கள்.. இவை அனைத்தும் நீங்கள் ஈர்த்து கொண்டது தான் அலைவரிசை ஒன்றிப்பின் மூலமாக…
எல்லா எண்ணங்களுக்கும் அலைவரிசை உண்டு.. ஆனால், எவரெவர் சரியாக ஒன்றிணைகிறார்களோ அவர்களால் மட்டுமே தகவல் பரிமாற்றம் சாத்தியம்..
உங்களுக்கு இது போல நடந்த நிகழ்வுகளை கமெண்ட் பண்ணுங்க
Praba Roose