அங்கயன் இராமநாதன் போன்ற ரவுடிகளை முன் நிறுத்தி தென்னிலங்கை ஆட்சியாளர்கள் அரசியல் செய்ய தொடங்கி இருக்கிறார்கள்

41

வலி கிழக்கு பிரதேச சபையின் அதிகார எல்லைக்குள் அதன் அனுமதி இல்லாமல் ஒழுங்கைகளுக்கு கல்லு பறித்து நாடகம் நடத்த முற்பட்ட நிலையில் பிரதேச சபை அதை தடுத்து நிறுத்தி இருந்தது

இந்த நிலையில், அந்த சம்பவத்தை சாதி முரண்பாடாக திரித்து அங்கயன் இராமநாதன் கோஷ்டி ஊர்வலம் ஒன்றை நடத்தி இருக்கிறது பிரதேச சபை அனுமதி பெறப்படாது, நடப்பட்ட ஆளும் தரப்பு பதாகையை அகற்றிய விவகாரத்தில் சாதி எங்கு வந்தது ? சாதாரணமாக சிந்திக்க தெரிந்த ஒருவருக்கு புரிய கூடிய அரச நிருவாகம் சார்ந்த விவகாரத்தை சாதி முரண்பாடாக சித்தரித்து அங்கயன் இராமநாதன் நாடகம் நடத்தி இருக்கிறது

யாழ்ப்பாணத்தில் அரச வேலைவாய்ப்பு வேண்டாம் என்றால் அங்கயன் இராமநாதனின் சிபாரிசு வேண்டும்

அரச சார்பற்ற சர்வதேச நிறுவனங்களின் உதவிகள் பொதுமக்களுக்கு பகிரப்பட வேண்டும் என்றால் அங்கயன் இராமநாதனின் அனுமதி அளிக்க வேண்டும். அதுவும் அங்கயன் இராமநாதன் குடும்ப உறுப்பினர்கள் தான் அதை செய்ய வேண்டும்

சிறு ஒழுங்கைகள் , சிறு வீதிகளுக்கு கல்லு பறித்து புனரமைப்பு செய்ய வேண்டும் என்றால் அங்கயன் இராமநாதனின் சிபாரிசு வேண்டும் . குறிப்பாக அங்கயன் இராமநாதன் குடும்பம் அடிக்கல் நாட்ட வேண்டும்

யாழ்ப்பாண பல்கலை கழகத்தில் பேரவை உறுப்பினர்கள் நியமிக்கப்படுவது என்றாலும் படிப்பறிவே இல்லாத அங்கயன் இராமநாதன் குடும்ப உறுப்பினர்கள் தான் நியமிக்கப்பட வேண்டும்

உண்மையில் மாவட்ட மற்றும் பிரதேச செயலகங்களில் இருக்கும் அதிகாரிகள் பலருக்கு தைரியம் இல்லை . சொல்லுவதை செய்யும் கிளிப்பிள்ளைகளாகவே இருக்கிறார்கள். இதை அங்கயன் இராமநாதன் கோஷ்டி பயன்படுத்தி கொள்ளுகிறது . அரசியலை வியாபாரமாக செய்யும் இந்த கும்பல் தங்களுடைய நலன்களுக்காக எந்த வேலைகளையும் செய்ய தயாராக இருக்கிறது. கடந்த காலங்களில் ஒட்டுக்குழுக்களை வைத்து தமிழ் மக்களை வேட்டையாடிய தென்னிலங்கை ஆட்சியாளர்கள் இப்போது ரவுடிகளை முன் நிறுத்த தொடங்கி இருக்கிறார்கள்

பொதுமக்கள் இனியாவது விழித்து கொள்ள வேண்டும் . அரச வேலைவாய்ப்புக்ளுக்கு சிபாரிசு கடிதம் கொடுத்தல், மின்சார இணைப்பு பெற்றுத் தருதல், வீதி விளக்கு பொருத்துதல் , ஒழுங்கைகளுக்கு கல்லு பறித்தல் என்பன தான் “அபிவிருத்தி”, “அபிவிருத்தி அரசியல்” என நம்பும் மிக மோசமான மனநிலையில் இருந்து வெளி வர வேண்டும் . அதன் மூலம் மட்டுமே இவ்வாறான ரவுடிகளையும் அவர்களின் நோக்கங்களையும் அடையாளம் காண முடியும்