தமிழர்களுக்கு தீர்வு வழங்குவது சிறிலங்கா அரசின் சொந்த விருப்பம்! முருங்கை மரத்தில் ஏறிய இந்தியா!

43

ஐக்கிய இலங்கைக்குள் சமத்துவம் நீதி சமாதானம் கெளரவம் ஆகிய தமிழ் மக்களின் எதிர்பார்ப்புக்களை பூர்த்திசெய்வது இலங்கையின் சொந்த ஆர்வத்தி்ல் தங்கியுள்ளது என்று இந்திய வெளிவிகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.இது 13வது திருத்தம் உட்பட அர்த்தமுள்ள அதிகார பகிர்வு தொடர்பாக இலங்கை அரசாங்கம் அளித்துள்ள உறுதிபாடுகளுக்கு சமமானதாக பொருந்துகிறது என்று அவர் கூறியுள்ளார்.

இலங்கையின் தேசிய அரசியல்வாதிகளின் விருப்பத்திற்கு ஏற்ற வகையிலேயே இலங்கையுடனான அரசியல் மற்றும் பொருளாதார உடன்பாடுகள் எட்டப்படுவதில் இந்தியா கவனமாக இருப்பதாக தெரிவித்த வெளிவிகார அமைச்சர்.தொடர்ந்து இலங்கையின் நலன்கருதி முதலீட்டு பணிகளை இந்தியா முன்னெடுக்க ஆர்வமாக உள்ளதாக உள்ளது எனவும் குறிப்பிட்டார்.இந்தியாவை ஆளும் பாஜக கட்சியின் வெளிவிகார அமைச்சரான இவர் இலங்கை தமிழர்களுக்கு தீர்வு வழங்குவது இலங்கை அரசின் சொந்த விருப்பம் என்று குறிப்பிடுகிறார்.

அதே போல் இலங்கையின் கடந்த அரசின் போது மேற்கொள்ளப்பட்ட உடன்படிக்கைகளை முன்னெடுப்பதாகவும் சொல்லும் இவர்களால்,ஏன் இந்தியாவின் கடந்த ஒரு அரசான காங்கிரஸ் கட்சியால் கொண்டு வரப்பட்ட இலங்கை – இந்திய ஒப்பந்தத்தை இலங்கை அரசிடம் வற்புறுத்த முடியவில்லை?இந்தியாவில் பொருளாதாரத்தை கட்டியெழுப்புபோம்,2 கோடிக்கு பேருக்கு வேலை கொடுப்போம் என்று காங்கிரஸ் கட்சியை விழுத்தி ஆட்சிக்கு வந்த இவர்கள்,இன்று எடுத்ததுக்கெல்லாம் காங்கிரஸ் ஆட்சியில் விட்ட தவறுகளே காரணம் என்று இந்தியாவில் சப்பைகட்டு கட்டுவது போன்றே,இலங்கை விவகாரத்தையும் கையாண்டு வருவது வேதனைக்குரியது.

இவர்களது அரசியல் தமிழர்களுக்கு முரணாக எழுந்து கொள்வது இது ஒன்றும் புதியதும் இல்லை! பழையதும் இல்லை! ஆனால் இன்னும் தமிழர்களின் வாக்குகளை தலைவர் பிரபாகரன்,புலிகள் பெயர் சொல்லி வாங்கிவிட்டு இன்னும் இந்தியாவின் கால்களை நக்கும் தமிழ் அரசியல்வாதிகளே எம் தேசத்தின் சாபகேடுகள்!