சீனா ராணுவத்தின் அனுகுமுறையே “Three steps forward one step backward” தான்.. எடுத்துக்காட்டாக முப்பது கிமீ உள்ளே வந்துவிட்டு பேச்சுவார்த்தை என்ற பெயரில் இந்தியாவுடன் ஏதாவது சாதகமான ஒப்பந்தம் செய்து கொண்டு நீயும் மூனு கிமீ பின்னாடி போ நானும் மூனு கிமீ பின்னாடி போறேன் என்பார்கள்.. அப்படி சில நாட்கள் முன்பு நடந்த சீன ராணுவத்தின் பின்னகர்வை தான் ஜீயின் மிகப்பெரிய வெற்றி என்று கொண்டாடினார்கள்..
ஆனால் மீண்டும் சில நாட்களில் சீன ராணுவம் அதைவிட பல மடங்கு உள்ளே வந்துவிட்டது.. இனி மீண்டும் பின் செல்லலாம் அல்லது வேறு ஏதும் நிகழலாம்.. ஆனால் சீன ராணுவம் இமயமலையில் உற்பத்தியாகும் நதிகளை கட்டுப்படுத்தக்கூடிய நிலப்பகுதிகளையும் CPECயின் (China Pakistan Economic Corridor) நீண்டகால பாதுகாப்புக்கு தேவையான பகுதிகளையும் கைப்பற்றும் வேலையை நிறுத்தாது.. அதுவும் இன்றைய உலகலாவிய சூழல் மற்ற நாடுகளை விட சீனாவிற்கு அதிக சாதகமாக இருக்கிறது.. சில காலம் தாழ்த்தினால் S400ம் ரப்பேல் விமானமும் இந்தியா பெற்று விடும் வாய்ப்பு இருக்கிறது.. அதையும் சீனா கணக்கில் வைத்து தான் வந்தவரை இப்போதே பறித்து விடுவோம் என்ற கணக்கில் செயல்படலாம்..
ஆனால் முழு அளவிலான இந்தியா-சீனா போர் ஒன்று நிகழ வாய்ப்பில்லை.. அப்படி ஒரு போரை சீனா ஆரம்பிக்கும் என்றால் அது நிச்சயம் தாய்வானுடன் தான் இருக்கும்.. அதற்கு முன் வேறு எந்த நாட்டுடனும் அந்தளவு ஆற்றலை வீணாக்க விரும்பாது.. சில கசப்பான சம்பவங்களை தவிர முழு அளவிலான இந்திய-சீன போர் நடக்க தற்போது வாய்ப்பில்லை.
நன்றி – முத்தூர் மகேந்திரன்