இந்திய எல்லை பகுதியில் சீனா தாக்குதல்,கேணல் தர அதிகாரி உட்பட மூன்று இந்திய இராணுவம் பலி

97

இந்தியாவின் வடக்கு எல்லையான லடாக் கல்வான் பகுதியில் அத்துமீறி நுழைந்துள்ள சீனா இராணுவத்திற்கும்,இந்திய படையினருக்கும் இடையில் ஏற்பட்ட வன்முறையில்,இந்திய இராணுவ கேணல் உட்பட மேலும் இரு ஜாவான்கள் கொல்லப்பட்டனர்.பதற்றத்தை தணிக்க பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக இந்திய இராணுவம் தெரிவிப்பு.இது குறித்து மேலும் தகவல் தெரிவித்த இந்திய தரப்பு,சீனா தரப்பிலும் சில சேதங்கள் ஏற்பட்டிருக்கலாம் என்று தெரிவித்துள்ளதுடன்.பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு வருவதாக தெரிவித்தனர்.

அமெரிக்க சீனா வர்த்தக போர் உச்சமடைந்துள்ள நிலையில்,சீனாவில் இருந்து அமெரிக்க ஐரோப்பிய நிறுவனங்கள் இந்தியாவை நோக்கி வர திட்டமிட்டுள்ள நிலையிலேயே,சீனா இந்தியா மீதான அத்துமீறல்களை அதிகப்படுத்தி மிரட்டுகின்றது.இந்திய இராணுவத்தின் பலம் பாகிஸ்தானை தாண்டி எவ்வளவு தூரத்துக்கு சீனாவை எதிர்க்கும் என்பதே இப்போதுள்ள கேள்விகுறி…