இந்திய ஒன்றிய அரசியல் சட்டங்களின் தன்மை

67

இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் எழுதப்பட்ட பின்புலத்தைப் பார்க்க வேண்டும்!

இரண்டு வகையாக ஒரு நாட்டின் சட்டத்தைச் சொல்வார்கள். எப்போதுமே அடிமைத்தனத்தையே சந்தித்திராத இங்கிலாந்து போன்ற நாடுகள் தங்கள் சட்டங்களை ‘Flexible constitution’ (நெகிழும் சட்டம்) ஆக வைத்திருக்கின்றன. இது போன்ற நாடுகளில் சட்டத்திருத்தங்கள் செய்ய ரொம்ப மெனக்கெட வேண்டாம். அடிமைத் தனத்தைச் சந்தித்து, போராட்டத்தால் விடுதலை பெற்ற அமெரிக்கா போன்ற நாடுகள், இனி உள்நாட்டுப் பிரச்சினைகளும், போராட்டங்களும் வெடிக்கவே கூடாது என்பதற்காக தங்கள் சட்டங்களை ‘Rigid constitution’ (நெகிழா சட்டம்) ஆக வைத்திருக்கின்றன! இந்நாடுகளில் சட்டத்திருத்தங்கள் என்பது மகாப்போராட்டம்! சாதாரணமாக தனிமனித சுதந்திரம் சம்பந்தப்பட்ட ‘ஓரினச் சேர்க்கை’ பிரச்சினைக்கு சட்டத்திருத்தம் செய்யவே அம்மக்கள் ‘ஓரினச்சேர்க்கை’ பிரச்சினைக்கே அம்மக்கள் எவ்வளவு போராடினார்கள் என்பதே இதற்கு நல்ல உதாரணம்!

ஆனால் இந்தியா இந்த இரண்டிலுமே சேராமல், ‘பகுதி நெகிழா-பகுதி நெகிழும்’ சட்டத்தை தன்னகத்தே கொண்டுள்ள ஒரு நாடு. அதாவது ஒன்றுக்கும் உதவாத சட்ட திருத்தங்களை எல்லாம் சுலபமாக கொண்டு வரமுடியும். ஆனால் மாநிலத்தைப் பிரிப்பது, சுயாட்சி, இனவிடுதலை போன்ற மிகமுக்கிய விஷயங்கள் சம்பந்தப்பட்ட சட்ட திருத்தங்களை எப்பாடுபட்டாலும் கொண்டு வரவே முடியாது! ஒருவேளை முயன்றால், அது இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்துக்கு எதிரானதாகிவிடும். உடனே அந்தப் போராளி தீவிரவாதி எனக் கொல்லப்படுவான் அல்லது சிறைதான்! அவசர நிலை பிரகடனம் செய்யக் கூட அதிகாரம் இருக்கும் இந்திய ஜனாதிபதியை ஒரே ஒரு விஷயத்திற்காக மட்டும்தான் பதவி இறக்கம் செய்ய முடியும். அவர் இந்திய அரசியல் சட்டத்திற்கு புறம்பாக செயல்பட்டால் மட்டுமே! இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் அவ்வளவு மகாபலம் பொருந்தியது என்பதற்கு இதுவே சான்று.

நன்றி – Rock Balaji