இந்தியா ~ சீனா எல்லை பிரச்சனை… நடப்பது என்ன?

85

இந்தியா ~ சீனா

இது இன்னிக்கு நேத்து வர பிரச்சனை இல்ல. காலகாலமா நடந்துட்டு வர பிரச்சனை தான்.
ஒரு தடவ அருணாசல பிரதேசத்த எங்களோடதுனு சொல்லி சீனா பிரச்சனை பன்னாங்க.
இன்னனாரு தடவ சிக்கிம் பக்கட்டு வந்து பிரச்சனை பன்னாங்க.
இப்போ லடாக்ல ஒரு பிரச்சனன முளைச்சிருக்கு.

இந்தியாவின் மேற்பகுதியில் அமைந்துள்ள காஷ்மீர் முழுவதும் இந்தியாவிடம் இல்ல

அத பாதி இந்தியா வும், பாதி பாகிஸ்தானும், பாதி சீனா வும் பங்கு போட்டுகிட்டாங்க.

அதை தான் Pakistan Occupied Kashmir னும், China occupied Ladak னும் சொல்வாங்க.

Pakistan Occupied Kashmir அயும், இந்தியாவில உள்ள காஷ்மீரயும் பிரிக்கும் கோடு தான் Line of Control ( LoC)

China Occupied Ladak அயும், இந்தியாவிலுள்ள லடாக்கயும் பிரிக்கும் கோட்டை தான் Line Of Actual Control ( LAC) னு சொல்வார்கள்.

இதுல LoC பாத்தோம்னா clear ah demarcated line னு சொல்வாங்க. ஆனால் LoC ஒழுங்கா வரையறுக்கப்பட்ட அளவிற்கு LAC ஒழுங்க பிரிக்கப்படல, அதனால தான் சீன எல்லையில இந்திய படை ஊடுருவியது, இந்திய எல்லை பகுதியில் சீன படை ஊடுருவி வருகிறது னு அடிக்கடி செய்திதாள்ல பாக்குறோம்.

இந்த LAC ல பார்தோம்னா, 2 பகுதிகள் இருக்கு..

நீல நிறத்தில் உள்ள பகுதி இந்தியா. இதே சிவப்பு நிறத்தில் இருக்கும் இடம் சீனா. அது இரண்டிற்கும் நடுவே கிரே நிறத்தில் இருக்கும் இடத்தில் தான் LAC இருக்கு. அந்த இடத்த தான் ADP னு சொல்வாங்க. அதாவது Area of Different Perceptions.

அதில் சிவப்பு நிறக்கோடு இருக்குமிடம் வரை எங்களுடைய பகுதியென்று சீனாவின் வாதமாகவும், நீல நிற கோடு வரை உள்ள பகுதி எங்களுடைய எல்லை என்றும் இந்தியா தரப்பு வாதமாக உள்ளது.

இப்படி இந்தியாவும் சீனாவும் எங்களுடையது என்று சொல்லும் இந்த கிரே நிறப்பகுதி ஒரு 10 Km அளவு தான் இருக்கும். அங்கயும் ஒரு மக்களும் வசிக்கவில்லை என்பது தான் உண்மை.

ஆரம்பத்தில கொஞ்சம் கொஞ்சமா தான் ஆள் நிறுத்தி தங்க நாட்டோட பலத்த காண்பிச்சிட்டு இருந்தாங்க.

ஆனா நாள் ஆக ஆக, இந்தியாவில இருந்து ஏகப்பட்ட ஆட்கள் அந்த grey area ல நிறுத்த ஆரமிச்சாங்க. இதனால தான் பிரச்சனையே உண்டாச்சு. இத ஆரம்பத்தில இருந்து எந்த மீடியாவும் கவணிக்காத நிலையில் முதன்முதலாக 12 May 2020 அன்று economic times இல் இது குறித்த செய்தி வெளிவந்தது.

இந்த Line of Actual Control என்னும் கோட்டை மூன்று இடத்தில மாறி மாறி சொந்தம் கொண்டாடிக்கிறாங்க. .

1. Pangong Lake
2. Galwan River Valley
3. Hot springs

Pangong நதி 60% சீனாவிலயும், மீதம் இந்தியாலயும் ஓடுது. 3 Idiots படத்தோட இறுதிகாட்சி கூட இந்த நதியில தான் எடுத்திருப்பாங்க.இந்த நதியில் Patrolling zones னு மேற்கிலிருந்து கிழக்கு வரைக்கும் 12 இடத்த பிரிச்சிருப்பாங்க. அந்த 12 Zones ல 2 வது zone ல இருந்து 12 வது zone வரைக்கும் நம்ம பாத்த grey area ல அடங்கும்.

சுருக்கமாக சொன்னால்,

அதுல 12 வது Zone வரைக்கும் எங்க இடம்தான் னு இந்தியா சொல்றாங்க. அதுல 2 வது இடம் வரைக்கும் எங்க இடம்தான் னு சீனா சொல்றாங்க.

மே மாதம் 5 ஆம் தேதியன்று, அதில் 5 வது zone வரைக்கும் சீன படையினர் நின்னாங்க. அப்பவே இந்திய பனடயினருக்கும் சீன படையினருக்கும் இடையே வாய்க்கால் தகராறு ஏற்பட்டுச்சு., நாளாக ஆக 11 ஆம் தேதியன்று 4 வது Zone க்குள் வந்து சீன பனடயினர் ஊடுருவ ஆரமிச்சாங்க. இதனால இருவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டு 11 நபருக்கு காயம் ஏற்பட்டது.

Pangong lake கிட்ட பிரச்சனை பன்ன சீனப்படை, அடுத்து கல்வான் மலைப்பகுதிகிட்ட பிரச்சனை பன்ன ஆரமிச்சிருக்காங்க. இதனால அவர்களுக்கிடையே நடந்த மோதலில் 20 இந்தியர்கள் இறந்துட்டாங்கனு இந்திய தரப்பிலிருந்து செய்தி வெளியானது.

இந்த மோதலின் போது யாரும் துப்பாக்கி, வெடிகுண்டு பயன்படுத்தல, கல்லெறிந்தே சண்டை போட்டுகிட்டாங்க.

சரி, ஏன் இப்போ திடீர்னு இப்ப இந்த சண்டை முளைக்கனும் னு பார்தோம்னா..

2 விசயத்த நாம கவனிக்க வேண்டியதா இருக்கு.

1. நாம முன்னாடியே பாத்த அந்த Pangong lake கிட்ட இருக்க Zonesல ரோடு ரொம்ப மோசமா இருக்கனால, இப்ப புதுசா இந்தியா ஒரு Military Road போட்டுட்டு வராங்க. இத பாத்து சீனா க்கு கோவம் வந்து இப்படி பன்னிருக்காலம்னு ஒரு தரப்பு வாதம் சொல்றாங்க

2 . DSDB Road

மற்ற எல்லா இடத்துலயும் இருக்க ரோடு லடாக்ல இருக்காது. அங்க இருக்கிற முக்காவாசி ரோடு மண் ரோடு தான். அதுவும் அப்பப்ப பனிசறிவு, வெல்லம் னு அடிக்கடி பாதிப்புக்குள்ளாகும். இதனால அங்க transport ன்றது லேசுபட்ட விசயமில்ல. சென்னையில இருந்து பெங்களூருக்கு ஒரு பொருள கொண்டு போறோம்னா 2 நாள்ல கொண்டு போயிடலாம். ஆனா இதே தூரம் லடாக்ல ஒரு பொருள கொண்டு போனும்னா , குனறந்தது அதுக்கு 4 நாளாவது தேவைப்படும்
இதுல பொருள் சேதாரமும் அங்க ரொம்பவே அதிகமா இருக்கும்.

அந்த வகையில தான் அங்குள்ள பாதையை சீரமச்சு Darbuk – Shayok – Daulat – Beg Oldie இந்த நான்கு இடத்தையும் இணைக்கும் வகையில் வகையில் DSDB Road ah construct பன்ன ஆரமிச்சாங்க. ஆனா இது Galwan பள்ளத்தாக்கு அருகில் போறது தான் சீனாவிற்கு பிரச்சினை. நாங்க Galwan பள்ளத்தாக்குல இருந்து 9 Km தொலைவில தான் ரோடு போடுறோம்னு இந்திய பாதுகாப்பு துறை விளக்கம் அளித்தும் சீனா பிரச்சினை பன்னுது.


ஆனா இன்னொரு பக்கம் இத எப்படி சொல்றாங்க னா, COVID 19 அ சீனாவே திட்டமிட்டு பரப்புச்சுனு ஒரு பக்கம் சொல்லிட்டு வந்தாங்க. கொஞ்ச நாள் கழிச்சு அவங்க சொன்ன வாதத்தை மெய்பிக்கும் வகையில் ஆரம்பத்தில் நோய் பரவ ஆரமித்த போது அதை வெளியுலகித்துக்கு தெரியாம சீனா மறைத்தது உலகெங்கும் அம்பலமானது. இதை திசைதிருப்பதான் சீனா இந்த சண்டையை துவக்கியுள்ளது னும் இன்னொரு பக்கம் வாதம் சொல்றாங்க…..


இந்த விசயத்த இந்தியா எப்படி எதிர்கொள்ள போகுது
திருப்பி அடிக்குமா, இல்ல சீனா விடம் பேச்சுவார்த்தை நடத்தி ஒரு சுமூகமான உறவை எட்டுமானு இனி வரும் காலத்துல தான் நாம பாக்கனும்…

நன்றி