மார்பை நிமிர்த்தி பெருமிதத்தோடு மக்கள் வணக்கம் செலுத்தும் இந்திய மூவர்ண கொடி பின்னால் உள்ள சொல்லாத கதை

158

இந்தியாவின் மூவர்ணக் கொடி காங்கிரசு கட்சியின் கொடிதான் என்பர்..காங்கிரசின் கொடி யாருடைய கொடி தெரியுமா..?

காங்கிரசை வளர்த்தெடுத்த பனியாக்களின் ஜைனக் கொடியைப் பாருங்கள்..மேலுள்ள சிவப்பையும் மஞ்சளையும் சேர்த்தால் காவி அல்லது மென் சிவப்பு வரும்…கீழுள்ள பச்சையையும் கருப்பையும் சேர்த்தால் அடர் பச்சை நிறம்…வெள்ளையை அப்படியே விட்டுவிட்டார்கள்…

மூவர்ணக் கொடியின் நடுவிலிருக்கும் அசோக சக்கரத்தின் 24 ஆரங்கள் விடுதலை அடைந்தபோது இந்தியாவின் மாகாண எண்ணிக்கை என்று கதை சொல்லுவார்கள்…

இந்தியாவின் எல்லையை அரசமைப்புச் சட்டத்தில் துல்லியமாக வரையறுக்காமல் விட்டுவிட்டு எப்போது வேண்டுமானாலும் மாறக்கூடிய மாகாண எண்ணிக்கையை கொடியில் அடையாளப்படுத்துமளவிற்கு அவ்வளவு வெள்ளந்திகளா இந்திய ஆட்சியாளர்கள்..?

படம் ஜைனர்களின் சின்னம்…(காங்கிரசின் கை சின்னம் யாருடையது என்று புரிந்திருப்பீர்கள்)

அதன் நடுவில் 24 ஆரங்களுடன் இருக்கும் சக்கரத்தைப் பாருங்கள்…! இந்த 24 ஆரங்கள் சமண சமயத்தின்(ஜைனின் ஆதி) 24 தீர்த்தங்கரர்களைக் குறிக்கும்..!

இந்திய மூவர்ணக் கொடியில் இருக்கும் அசோக சக்கரம் எங்கிருந்து எடுக்கப்பட்டதென்று தெரிகிறதா..?

மார்பை நிமிர்த்தி இந்திய மக்கள் பெருமிதத்தோடு வணக்கம் செலுத்துவது சமணத்திற்கும்… பனியாக்களின் மூதாதையர்களான 24 தீர்த்தங்கரர்களுக்கும் தான்..!

-ஆரல்கதிர் மருகன்