இந்திய திரிபு கொரோனா வைரசுக்கு எதிராக செயற்படும் Pfizer தடுப்பூசி

81

இந்திய திரிபு கொரோனா வைரசுக்கு எதிராக Pfizer தடுப்பூசி செயலாற்றுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய திரிபு கொரோனா வைரஸ் பிரான்சில் வேகமாக பரவி வருகின்றது. மிகவும் ஆபத்தான இந்த திரிபு வைரசை கட்டுப்படுத்த பிரான்ஸ் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. அதேவேளை, இந்த வைரசுக்கு எதிராக செயற்படும் தடுப்பூசிகள் தொடர்பாகவும் தீவிர ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருகின்றது.

இந்நிலையில், இன்று சனிக்கிழமை Institut Pasteur ஆய்வுகூடம் வெளியிட்ட தகவல்களின் படி, இந்திய திரிபு கொரோனா வைரசுக்கு எதிராக Pfizer தடுப்பூசி செயற்படுவதாக அறிவித்துள்ளது. இதே தடுப்பு மருந்து முன்னதாக பிரித்தானிய திரிபு கொரோனாவுக்கு எதிராகவும் செயற்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.