ஐங்கரனின் பதவி விலகல் – சுமந்திரன் அணியின் மற்றோரு நாடகம்!

181

தமது கட்சி உறுப்பினர்கள் ஒத்துழைக்க மறுப்பதால் கட்சியின் அடிப்படை உறுப்புரிமையிலிருந்தும், கரவெட்டி பிரதேச சபை தவிசாளர் பதவியிலிருந்தும் விலகுவதாக பிரதேச சபை தவிசாளரும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் உறுப்பினருமான தங்கவேலாயுதம் ஐங்கரன் இன்று அறிவித்துள்ளார்.

உண்மையில் என் இந்த பதவி விலகல் நாடகம் ஏன் ?

ஒரு தவிசாளர் இரண்டு வருடங்கள் பெரும்பான்மை இன்றி வரவு – செலவுத்திட்டத்தை நிறைவேற்றமுடியும் ஆனால் அவரது பதவிக் காலத்தின் மூன்றாம் வருட வரவு – செலவுத்திட்டத்தை நிறைவேற்ற பெரும்பான்மை இருக்க வேண்டும் இல்லது போனால் தவிசாளர் பதவி விலக நேரிடும்.

இது ஐங்கரனுக்கு மூன்றம் வருடம் கரவெட்டி பிரதேசசபையில் தமிழ்த் தேசியக் கூட்ட்டமைப்பின் உறுப்பினர் 9 பேரும், ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர் 2 பேரும் , அங்கஜன் அணியினர் 7 பேரும், ஈபிடிபி உறுப்பினர் 3 பேரும், காங்கிரஸ் கட்சி 7 பேரும், விடுதலைக் கூட்டணி 3 பேருமாக 31 உறுப்பினர்கள் அங்கம் வகிக்கின்றனர்.

சுமந்திரன் சார்பு கொள்கை கொண்ட ஐங்கரன், சர்வாதிகார போக்கு உடையவர். கடந்த காலங்களில் அவர் மக்களுடனும் அரச அதிகாரிகளுடனும் தேவையின்றி முரண் பட்டுக்கொண்டவர்.

Covid 19 காலப்பகுதியில் சுகாதார மற்றும் சமூக இடைவெளி நடைமுறைகளை பின்பற்றாத நெல்லியடி பொது சந்தையை, சுகாதார உத்தியோகத்தர்கள் சீல் வைத்தனர்.  இதை அறிந்து அங்கு வந்த ஐங்கரன் சந்தையை திறக்கும்படி உத்தரவு பிறப்பித்தார். ஆனால் அரச சுகாதார அதிகாரிகள் மறுத்து விட்டனர் . அப்போது ஐங்கரன் அங்கு நின்றவர்களை பார்த்து சந்தையையை திறக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் கரங்களை உயர்த்துங்கள் என்று கேட்டு தன்னை ஒரு மக்கள் சேவகன் போல காட்ட முயன்றார். அதற்கு சுகாதார உத்தியோகத்தர்கள், நாம் இங்கு வகுப்பு நடத்த வரவில்லை என்று கூறி நகர்ந்தனர்.

அது போல ஒரு காணி பிரச்சினையில்  பெண் ஒருவர் தன்னை தாக்கியதாக கூறி அரச உத்தியோகம் பார்க்கும் பெண் மீது வழக்கு பதிவுசெய்து அப் பெண்ணை மன உளைச்சலிற்கு உட்படுத்தியவர்.

இவரது இது போன்ற செயல்களால் பலராலும் வெறுக்கப்படும் ஒரு நபராகவே ஐங்கரன் காணப்படுகிறார் . இவரது சுமந்திரன் சார்பு நிலைப்பாடு மக்கள் மத்தியில் எரியும் நெருப்பில் என்னை ஊற்றியது போன்ற சூழலை ஏற்கனவே உருவாக்கி இருந்தது.

இவரது செயற்படுகளால் அதிருப்தி கொண்ட சொந்த கட்சி உறுப்பினர்களே அதாவது ஒட்டு மொத்தமாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் 9 உறுப்பினர்களில் ஐங்கரன் தவிர்ந்த சகலரும் 2021 வரவு – செலவுத்திட்டத்தை எதிர்க்க முடிவு செய்திருந்தனர். இதனாலேயே இந்த ராஜினாமா நாடகத்தை கையில் எடுத்து உள்ளார் ஐங்கரன்.

எட்டு உறுப்பினர்களையும் மாட்டின் ரோட்க்கு அழைத்த  கூட்டமைப்பின் தலைமை வரவு – செலவுத்திட்டத்தை ஆதரிக்கும் படி கோரியது. உறுப்பினர்கள் பலரும் ஐங்கரன் மீது பல குற்றச்சாட்டுக்களை முன் வைத்தனர். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு செல்வாக்கு  இழந்தமைக்கு இவரின் செயற்பாடுகளும் ஒரு முக்கிய காரணம் என்பதை பலரும் சுட்டிக் காட்டினார்.

தவிசாளர் பதவி தனக்கு தேவை இல்லை எனவும் மக்கள் செல்வாக்குள்ள துடிப்புள்ள ஒருவரை நியமித்து பிரதேச சபை செயற்பாடுகளை வினைத்திறனுடன் முன்னெடுத்து செல்லும்படியும், முன்னாள் தவிசாளர் வியாகேசு தெரிவித்திருந்தார்.

இதே வியாகேசு தான் சில ஆண்டுகளுக்கு தவிசாளர் பதவிக்கு ஐங்கரனே தகுதி உடையவர் என கூறி ஐங்கரனது பெயரை தவிசாளர் பதவிக்கு, கட்சி கூட்டத்தில்  பிரேரித்திருந்தவர். மேலும் ஐங்கரன், முன்னாள் தவிசாளர் வியாகேசு மற்றும் பரம்சோதி ஆகியோரின் ஆதரவுடனேயே ஒரே ஒரு வாக்கு வித்தியாசத்தில் தவிசாளராக தெரிவுசெய்யப்பட்டார்.

கூட்டமைப்பின் தலைமை மற்றைய 8 உறுப்பினர்களிடமும், சொந்த கட்சி உறுப்பினர்களாலேயே வரவு-செலவுத்திட்டம்  தோற்கடிக்கப்பட வேண்டாம் என்றும் வரவு- செலவுத்திட்டத்தை ஆதரிக்கும் படியும், கேட்டுக்கொண்டது. ஆனால் கூட்டமைப்பின் மற்றைய 8 உறுப்பினர்களும் ஐங்கரன் பதவி விலக வேண்டும் என தொடர்ச்சியாக கோரிக்கை விடுத்தனர்.

இவற்றை அவதானித்த  ஐங்கரன் தந்திரமாக, வரவு-செலவுத்திட்டத்தை நிறைவேற்ற தன்னை அனுமதிக்குமாறும் அதன் பின் டிசம்பர் 1 ம் திகதி தானாக பதவி விலகுவேன் என்றும் கூறி திகதியிட்ட ராஜினாமா கடிதம் ஒன்றை கையளித்தார். ஆனால் தெரிவத் தாட்சி அதிகாரிக்கு எந்த கடிதமும் அனுப்பப் படவில்லை. அத்தோடு தெரிவத் தாட்சிஅதிகாரிக்கு பின் திகதியிட்ட கடிதம் அனுப்பப்படுவதில்லை ஆக மொத்தத்தில் இது சுமந்திரன் ஆதரவு அணியின் ஒரு நாடகமே .

-ஐக்கியன்