கொரோனா வைரஸ் தாக்கம் தொடர்பிலான அரசாங்கத்தின் நாளாந்த அறிக்கையில் உயிரிழப்புக்களின் எண்ணிக்கை 1 220 என தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், இந்த எண்ணிக்கை பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
முன்னராக கொரோனாவின் முதல் அலையின் போது ஒரு தடவை 2 ஆயிரத்தும் மேற்பட்ட உயிரிழப்புக்கள் அறிவிக்கப்பட்டு அதிர்ச்சியினை சுகாதாரத்துறை ஏற்படுத்தியிருந்தது.
உண்மையில் இப்புள்ளிவிபரங்களின் பின்னால் உள்ள நிலைவரம் என்ன ?
சுகாதாரத்துறையின் நாளாந்த அறிக்கையில் மருத்துவமனை தனியாகவும், மூதாளர் இல்லங்கள், சமூக மையங்கள் தனியாகவும் வெளியிடப்பட்டு வருகின்றன.
இவ்விரண்டு கண்ணீடுகளையும் சேர்த்தும், தனியாகவும் ஊடகங்கள் ஒவ்வொன்றும் வெளியிட்டு வருகின்றன.
குறிப்பான மூதாளர் இல்லங்கள், சமூக மைய உயிரிழப்புக்கள் தொடர்பிலான புள்ளிவிபரங்களை உடனடியாக சுகாதாரத்துறைக்கு கிடைப்பதில் தாமதங்கள் ஏற்படுவதுண்டு.
கடந்த மூன்று நாட்களாக உயிரிழப்புகள் தொடர்பிலான கண்ணீடுகள் கிடைக்காத நிலையில், தனியே மருத்துவமனை உயிரிழப்புக்களை மட்டுமே வெளியிடப்பட்டு வந்தன.
இந்நிலையில் இன்று கடந்த மூன்று நாள் உயிரிழப்புக்களையும் சேர்ந்து வெளியிட்ட நிலையிலேயே இன்றைய உயிரிழப்பு 1 220 என வெளிவந்துள்ளது.