இன்று கந்த சஷ்டி விரத முதலாம் நாள்.

127

குழந்தையும் கடவுளும் ஒன்றென்பர் அப்படியாக நாம் எல்லாம் குழந்தையாக பாவித்து வணங்கும் முருகப்பெருமானுக்கு கந்த சஷ்டி விரதம் மிகுந்த விஷேடமான ஒன்று.

முருகன் எந்தக் கோலத்தில் இருந்தாலும், அவனைக் குழந்தையாகப் பாவித்து, பரிவுடன் அன்பு செலுத்துவதில் தமிழ் மக்களுக்கு நிகர் அவர்கள்தான்.

தங்கள் மொழி காக்க வந்த தமிழ்க்கடவுள் என்பதால் நமக்கெல்லாம் முருகப் பெருமானிடம் அத்தனை அன்பு, பரிவு. நாம் எப்படியெல்லாம் நினைந்து வணங்குகிறோமோ அப்படி எல்லாம் எமக்கு அருள் புரிபவர், பற்றுகளை அறுத்தெறிந்து, எதுவும் வேண்டாம் என்று பழனியில் ஆண்டியாக நிற்பவனும் அவன் தான், இச்சா சக்தியான வள்ளியையும், கிரியா சக்தியான தெய்வானையையும் மணந்து, திருக்கல்யாணக் கோலத்தில் தணிகை மலையில் அருள்பவனும் அவன்தான்!

அப்படியான எம்பெருமானை இப் புண்ணிய தினத்தில் தொழுது இஷ்ட சித்திகளை பெற்றுய்வோம்..!

“இந்திரன் முதலா எண்டிசை போற்ற
மந்திர வடிவேல் வருக வருக!

kanthasasti murugan

Sajee.k