இன்று மேற்குலகத்தைக் கலங்கடித்துக் கொண்டிருக்கும் முப்பந்தைந்து வயதே நிரம்பிய ஆபிரிக்க நாடான Burkina Faso இன் தளபதி

264

Ibrahim traoré.

இன்று மேற்குலகத்தைக் கலங்கடித்துக் கொண்டிருக்கும் முப்பந்தைந்து வயதே நிரம்பிய ஆபிரிக்க நாடான Burkina Faso இன் தளபதி. மாலி, புர்கினோ பாசோவைத் தொடர்ந்து இன்றைய Niger நாட்டுப் புரட்சியின் பிதாமகன்.

மேற்குலக ஆதிக்கத்திலிருந்து முழு ஆபிரிக்காவையும் மீட்டெடுப்போம் என்று சபதமிட்டு அதற்காகத் துரிதமாகாக் காய்களை நகர்த்திக் கொண்டிருக்கிறார் Ibrahim traoré.

அதன் முதல் கட்டமாக ஒரு இராஜதந்திர உத்தியாக ரஸ்யாவுடன் கைகோர்த்திருக்கிறார்.

ஏற்கனவே உக்ரைன் நெருக்கடிக்குள் சிக்கித் திணறும் மேற்குலகத்திற்கு எதிரான களமுனையை ஆப்பிரிக்காவில் திறந்திருக்கிறார் Ibrahim traoré.

Ibrahim traoré போன்றே அன்றைய Burkina Faso நாட்டின் புரட்சியாளன் தோமஸ் சங்காரா கிளர்ந்தெழுந்தபோது உலக அரச பயங்கரவாதத்தால் படுகொலை செய்யப்பட்டார்.

வரலாறு திரும்புகிறது.

மூன்று தசாப்தங்கள் கழித்து அந்த மண்ணிலிருந்து Ibrahim traoré என்ற புரட்சியாளன் வெடித்துக் கிளம்பியிருக்கிறான்.

பாட்ரிஸ் லுமும்பா வில் தொடங்கி சமோரா மோசஸ் மார்சல், தோமஸ் சங்கரா என்று ஆபிரிக்கப் புரட்சியாளர்களின் பட்டியல் நீளமானது. அதில் தற்போது Ibrahim traoré ம் இணைந்து கொள்கிறார்.

ஆனால் இவர்கள் அனைவரும் வரலாற்றின் ஓர வஞ்சனைக்குள் – இருட்டடிப்புக்குள் தள்ளப்பட்டவர்கள்.

காரணம் எளிமையானது.அதாவது இவர்கள் அரச பயங்கரவாத உலக ஒழுங்கை ஈவிரக்கமின்றி குலைக்க முயன்றதுதான் காரணம்.

ஏனைய புரட்சியாளர்கள் ஏதோ ஒரு புள்ளியில் இன்றைய அரச பயங்கரவாத உலக ஒழுங்கின் நிகழ்ச்சி நிரலுக்குள் உள்மடிந்து போனதால் வரலாற்றில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளார்கள்.

இதுதான் அதன் சூட்சுமம்.

தலைவர் பிரபாகரனும் தமிழீழ விடுதலையினூடாக அரச பயங்கரவாரத் தளைகளிலிருந்து உலகில் அடக்கப்பட்டு ஒடுக்கப்படும் தேசிய இனங்களை விடுவிக்கும் சூட்சுமங்களைத் தன்னகத்தே கொண்டவராக அடையாளம் காணப்பட்டார்.

இதனால் வேலுப்பிள்ளை பிரபாகரனையும் வரலாற்றின் ஓர வஞ்சனைக்குள் தள்ளவே இன்றைய உலக ஒழுங்கு பெரும் பிரயத்தனப்படுகிறது.

இன்றைய ஆபிரிக்கப் புரட்சியினூடாக நமக்கு கிடைக்கும் செய்தி என்னவென்றால் ‘நந்திக்கடல் கணிதம்’ உலகின் வேறு ஒரு முனையில் தனது சமன்பாடுகளைத் தீர்த்துக் கொண்டிருக்கிறது என்பதுதான்.

புரட்சியாளன் தோமஸ் சங்கரா தான் மடியும் முன் சொன்னார். ‘என்றும் ஏகாதிபத்தியத்திற்கு இந்த மண் அடி பணியாது. நான் வீழ்ந்தாலும் எனது மக்களிலிருந்து ஒரு வீரன் பிறப்பான். ஏகாதிபத்தியத்தை வீழ்த்துவான்’ என்றார்.

தோமஸ் சங்காரா கொல்லப்பட்ட அடுத்த வருடம் பிறந்த Ibrahim traoré இன்று தோமஸ் சங்கராவின் கனவை மட்டுமல்ல முழு ஆபிரிக்க மக்களின் கனவையும் சுமந்தபடி களத்தில் நிற்கிறார்.

தமிழீழமும் ஒரு நாள் புரட்சியில் குதிக்கும் ஒரு விடுதலை வீரனை பிரசவிக்கும் என்பதன் நம்பிக்கைக் குறியீடுதான் Burkina Faso உம் Ibrahim Traoré உம்.

வெல்வோம் ❤️ வென்றே தீருவோம் 🔥