அடக்குமுறை அரசுகளும்,தமிழர் அறிய வேண்டிய புலனாய்வும்

103

சிங்களக் காவல்துறையினால்70,80களில் ஈழத்தமிழர் சந்தித்த, அடக்குமுறைக்கு ஒத்ததான அடக்கு முறையே, தமிழ்நாட்டு காவல்துறையும் தனது மக்களில் மேற்கொண்டது. இதில் மனவேதனை என்னவென்றால் தமிழர்களே, தமிழர்களை தாக்கி, அவர்களின் சொத்தை சூறையாடியது தான் மிகக்கொடுமை.!

சரி, இந்த அடக்குமுறையை இன்னும் எவ்வளவு காலத்துக்கு எதிர்கொள்ளப் போகிண்றீர்கள்.?

#ஒரு இனக்குழுமத்தின்மீது, ஒரு அரசு அடக்குமுறையைக் கட்டவிழ்த்து விடும் போது, அந்த அடக்குமுறைக்கு அடிபணிந்து போகவேண்டும், (இதுவரை தமிழகம் போனது போல)

#அல்லது ஆயுதவழியில் உங்களை, நீங்களே பாதுகாக்கவேண்டும்.(ஈழத்தமிழர் போராடியதுபோல்)

#மூன்றாவது அறவழியில் அதிகாரத்தை கைப்பற்றி, அதை மக்களுக்கு சாதகமாக்குவது. அதை வைத்து தனி நாட்டை நோக்கி நகருவது. இந்த மூன்று தேர்வுகளும் தான் உங்கள் முன் இப்போது உள்ளது.!

உங்களது அகிம்சைவழி போராட்டங்களை, ஆளும் அரசு உதாசீனம் செய்வதையே வாடிக்கையாகக் கொண்டுள்ளது. பெரும்பாலும் இந்த அரசுகள் மக்கள் எழுச்சிகளை மக்களோடு மக்களாகவே வந்து சிதைப்பார்கள், அல்லது போனால் அடக்குமுறையை கையாழ்வார்கள்.

மக்கள் மீது வன்முறையை உருவாக்கி, சொத்துக்களை சேதமாக்கி, உயிர் அச்சுறுத்தலையும் ஏற்படுத்துவார்கள். இதில் பெரும்பாலும் இலக்கு வைக்கப்படுவது சிறுவயதுடையோரும், முதியவர் மற்றும் பெண்களுமேயாகும்.

இது போராடும் மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை தோற்றுவிக்கும். அதையே தான் அடக்குமுறை அரசுகளும் விரும்புகின்றன.

இது காலம், காலமாக, மக்கள்மீது அரசுகள் கையாளும் உளவியல் போர். மக்கள் இன்னுமொரு போராட்டத்தில் ஈடுபடக்கூடாதென்பதன் மறைமுக எச்சரிக்கையே, இந்த தாக்குதல்கள்.

இந்த அடக்கு முறைகளை வெற்றிகரமாக எதிர்கொண்டால் மட்டுமே, உங்கள் கோரிக்கையை எட்ட முடியும்.!

இதை கையாள்வதற்கு பொது மக்களுக்கு, புலனாய்வுப்பார்வை ஒன்று மிக மிக அவசியமானது. இதில் நீங்கள் தேர்ச்சி பெறவேண்டும்.!

ஒரு மக்கள் எழுச்சியை, ஒரு அரசு சிதைப்பதற்கா, தனது எல்லா வளங்களையும் உபயோகிக்கும். அதில் சிறு, சிறு பகுதியாக பல வேலைத்திட்டங்கள் நடைபெறும். அதனை நீங்கள் இனம் காணவேண்டும்.

சரி, இதை எப்படி எதிர்கொள்வது?

இந்த உலகத்தில் அரசுகள் கூறும் மிகப்பெரிய பொய் சுதந்திரம்.!

வளர்ந்த நாடுகளைப்பொறுத்தவரை, வெளிப்பார்வைக்கு எல்லோரும் சுதந்திரமாக இருப்பதுபோல் தோன்றினாலும், இங்கு யாருமே சுதந்திரமாக இல்லை.

#ஒரு நாட்டில் இரண்டுவிதமான ஆட்சி நடக்கின்றது. ஒன்று மக்களுக்கு, வெளியில் கண்ணுக்கு தெரிந்து வாழும் வாழ்க்கை. எமக்கான சட்டங்களை இயற்றி அதனுள் நாம் வாழும் வாழ்கை.

#இன்னொன்று, எமது கண்ணுக்கு தெரியாது, எம்மை சுற்றி பின்னப்பட்ட உளவு கண்காணிப்பு. இதில் எந்த சட்டங்களும் அவர்களுக்கு இல்லை. அன்றைய நிகழ்வுக்கு அவர்கள் எடுக்கும் முடிவே அவர்களின் சட்டங்கள்.!

எப்படி நாம் கண்காணிக்கப்படுகின்றோம்?

வளர்ந்த நாடுகளின், உங்களது கண்,கை விரல், அங்க அடையாளங்கள் தொடங்கி, வங்கி அட்டை, செல்போன், கணனி, ஈமெயில், மருத்துவ அட்டை, சோசியல் மீடியா, கார் ,பைக், இப்படி சொல்லிக்கொண்டே போகலாம். இவைகளின், ஒன்றை வைத்திருந்தாலும், நீங்கள் கண்காணிக்கப்படுகிண்றீர்கள்.!

இதைவிட தேவைக்கேற்ப நேரடிக்கண்காணிப்பின் ஊடாகவும் மேலதிக தகவல்கள் திரட்டப்படும். அத்தோடு செயற்கைகோள் மூலமான தெழில்நுட்ப வளர்ச்சி, தனிமனித தேடல்களையும், இன்று அமெரிக்கா சாதகமாக்கியுள்ளது.

மேலைநாடுகளைப் பொறுத்தவரை,நோயின் நிமித்தம், அல்லது விபத்தின் நிமித்தம், ஒரு முறை வைத்திய சாலைக்கு சென்றுவந்தால் போதும், உங்கள் DNA தொடங்கி அணைத்து உடல்கூற்று தகவல்களையும்,உங்களுக்கு தெரியாமலேயே திரட்டிவிடுவர்.

வளர்முக நாட்டில் இயங்கும் நிறுவங்கள்(அரசு மற்றும் தனியார்) ,வங்கி, வைத்தியசாலைகள் போன்றவைகளை மறைமுகமாக கையாள்வது அல்லது உபயோகிப்பது உளவுத்துறைகளே. (தகவல் திரட்டுவதற்காக)

உதாரணத்துக்கு வைத்திய சாலைகளில் சேமிக்கப்படும் தகவல்களை, வைத்தியசாலையின் “மெய்ன் சேவரில் சேமித்து” வைத்திருப்பார்கள். அவர்களிடமிருந்து, தானாகவே அந்த தகவல்கள், அந்த நாட்டின் “பிரதான சேவர்” ஒன்றுக்கு அனுப்பப்படும்.

அங்குவைத்து தான், வைத்திய தகவல்கள், காவல்துறையின் (குற்றங்கள் செய்திருப்பின்) தகவல்கள், வங்கித் தகவல்கள், மட்டுமல்லாது, தனிமனித தகவல்கள் உட்பட ,பயணச்சீட்டு எடுக்காது, பொதுப்போக்குவரத்தை பயன்படுத்திய குற்றங்கள் கூட,அங்கு பதிவு செய்யப்படும்.

இது போன்ற அனைத்து தகவல்களும் ஒன்றாக்கி, உங்களுக்கான “தனி நபர் மொத்த தகவல் படிபம் ஒன்றை உருவாக்கி” அது சென்ரர் சேவர்” ஒன்றுக்கு அனுப்பப் படும். சரியாக சொல்வதானால் “ஒரு அணுஆயுதத்தை விடக் கூடிய பாதுகாப்பில்” உங்கள் தகவல்கள் சேமிக்கப்பட்டு பாதுகாக்கப்படுகின்றன.!

ஆக, இந்தப்பூமிப்பந்தில் யாரும் சுதந்திரமாக இல்லை என்பதே நிஜம்.!

இவைகளை நாம் அறிந்துகொள்ள வேண்டும்.”

ஒவ்வொரு தலைமையையும், மற்றும் VIP களையும், நாமும் எமது கண்காணிப்பில் வைக்க வேண்டும். அவர்களின் “பேச்சின் காரணியை” சரியாக நாம் உள்வாங்கவேண்டும். எல்லா விடயங்களையும் தூர நோக்குடன் பார்க்கவேண்டும்.

நாம் அதற்கு எம்மைத் தயார் படுத்துவோம்.

உங்களுக்கு, “ஒருவரிடம் முழுமையான நம்பிக்கை வரும்வரை, அவரை சந்தேகிப்பது” தவறில்லை.

முழு நம்பிக்கை வந்தபின்பும், எச்சரிக்கையுடன் இருப்பதும் தவறில்லை.

இந்தக் கருத்தை நான் உங்களிடம் திணிக்கவில்லை. எனது அனுபவங்களையே இங்கு பதிவு செய்துள்ளேன்.!

ஆக, உங்களுக்கு தெளிந்த பார்வை ஒன்று வேண்டும். புலனாய்வு சம்பந்தமான பதிவுகளை தேடிப்படியுங்கள். அப்போது தான் எம்மை சுற்றி போடப்பட்டிருக்கும் மாயவலை கண்ணுக்கு தெரியும்.

வரும் காலங்களில் இதுபற்றி மேலும் தேடுவோம். ஒன்றாக பயணிப்போம். துன்பத்தை தந்தவனுக்கே, அதைத் திருப்பி கொடுப்போம் .!

உங்களுடன் துரோணர்