நடக்குமா சுயாதீன சர்வதேச விசாரணை?

600

நடக்குமா சுயாதீன சர்வதேச விசாரணை?
ஒருபேப்பருக்காக- சுகி

சுயாதீன சர்வதேச விசாரணை (International Independent Investigation) என்று அழைக்கப்படும் ஒரு விசாரணைப் பொறிமுறை ஒன்றை, சிறீலங்காவில் இடப்பெற்ற போர்க்குற்றங்கள் மற்றும் மனிதவுரிமை மீறல்கள் தொடர்பாக ஏறபடுத்தும் படி வேண்டுதல் என்பது எமக்குரிய நியாயமான ஒரு விண்ணப்பம் ஆகும். இவ் நியாயமான விண்ணப்பத்தை ஜனநாயக விழுமியங்களை மதிப்பதாகக் கூறிக்கொள்ளும் எந்தவொரு அரசாலும் மறுக்க முடியாது.

அங்கு நடந்தது இனப்படுகொலை என்று தெளிவாகத் தெரிந்து கொண்டபின்னும் ஏன் சுயாதீனமான சர்வதேச விசாரணைக்கு விண்ணப்பிக்கவேண்டும் என்று சிலர் கேட்கலாம். எமக்குத்தெரியும் அங்கு நடந்தது அப்பட்டமான இனப்படுகொலை என்று ஆனால் தீர்ப்பு வழங்கும் கதிரையில் நாம் இல்லை. அக்கதிரையில் இருப்பவர்களை, நாம் தாம் எமது பிரச்சனையைச் சொல்லி எமது பக்கம் கவனத்தை திருப்ப வேண்டும்.

இவ்வளவு நாளும் சொல்லாததா? என்று நீங்கள் கேட்கக்கூடும். சொன்னால் என்ன திருப்பித்திருப்பிச் சொல்லுங்கள் அதுவும் இது போன்ற சில உத்திகள் மூலம் அவர்களுக்கு புரிந்த மொழியில் பேசுங்கள். அதாவது ஜனநாயகம், பொது மக்களின் விருப்பம், நியாயமான வேண்டுகோள் என்பவற்றுக்கு செவிசாய்ப்பதாகச் சொல்லிக்கொள்ளும் இவ்வரசாங்கங்களுக்கு அவர்களது பாதையிலே நாமும் பயணித்து 100,000 ஒரு இலட்சம் பொதுமக்களின் கையெழுத்தை (epetition) நாம் பெற்றுக்கொண்டால், அவர்கள் இவ் விடயத்தை கட்டாயமாக பிரித்தானிய பாராளுமன்றத்தில் விவாதத்திற்கு எடுத்துக்கொள்வார்கள். இது பிரிதானிய பாராளுமன்ற வழமை.

ஆகவே தயங்காது இப்பத்திரத்தை உடனடியாக நிரப்புவதோடு, உங்கள் வீட்டில் இருக்கும் அனைவரையும், அவரவர் பெயர், விபரங்களைக் கொடுத்து நிரப்பச்சொல்லுங்கள். இதில் முக்கியமாகக் இருக்க வேண்டியது ஓவ்வொருவருக்கும் ஒருமின்னல்சலும் (email address) அவர் பிரித்தானிய பிரஜையாகவோ அல்லது இங்கு வசிப்பவராகவோ இருக்கவேண்டும். அதற்காக (UK passport இருக்க வேண்டும் என்பதில்லை). நீங்கள் இப்பத்திரத்தை நிரப்பிய பின் உங்கள் மின்னஞ்சல் முகவரிக்கு அதை உறுதிப்படுத்தச்சொல்லி வரும், மின்னஞ்சலை திறந்ததும், உங்கள் பெயர் பூரணமாக நிரப்பியது உறதியாகி, அப்பத்திரத்தை நிரப்பியவர் தொகை நீங்கள் மீண்டும் திறந்து பார்க்கும் போது ஒன்றால் அதிகரித்திருக்கும்.

இதுவரைக்கும் 2018 கையெழுத்துக்கள் சேர்ந்துவிட்டன. இன்னமும் 98,000 கையெழுத்துக்கள் சேர்க்க வேண்டும். ஒரு கடினமும் இல்லை. தமிழர் ஒவ்வொருவரும் நினைத்தால் இதை நாம் நடந்தி முடிக்கலாம். ஒருநாளைக்கு ஒருகையெழுத்து என்று உங்கள் உறவினர்கள், நண்பர்கள் அயலவர்கள், பாடசாலை, பல்கலைகழக, அலுவலக நண்பர்கள் என்று முயன்றால் முடியாதது எதுவும் இல்லை. சிலருக்கு கொம்பியூடர் என்றாலே அலேர்ஜி, சில வயது போனவர்களிடம் மின்னஞ்சல் இருக்காது. இளயவர்கள்;தான் அவர்களுக்கும் உதவிசெய்யவேண்டும்.

இதற்கு தமிழான இருக்க வேண்டும் இல்லை, மனித நேயம் உள்ள எவரும் செய்யலாம். நாம் சுயாதீனமான விசாரணையைத்தான் வேண்டிநிற்கிறோம், அது ஒரு நியாயமான கோரிக்கை, 3 இலட்சம் தமிழ் மக்களுக்கு நடந்த கொடுமைகள், கொலைகள், பாலியல்வல்லுறவுகள், பற்றிய சுயாதீனமான விசாரணையைக் கோரும் கோரிக்கை. இது மனிதாபிமானக்கோரிக்கை. இதையே “இலங்கையில் இடம்பெற்ற போர்க் குற்றங்கள் மற்றும் மனிதவுரிமை மீறல்கள் தொடர்பில் ஒரு சுதந்திரமான சர்வதேச விசாரணையை மேற்கொள்வது இலங்கை மக்களுக்கான நியாயமான தேவை மட்டுமல்ல அது சுதந்திரமான ஜனநாயகத்தை உலகெங்கும் முன்னெடுக்கும் அமெரிக்காவுக்கும் தேவையான ஒரு கொள்கையுமாகும்” என அமெரிக்காவின் நியூயோர்க் பிராந்திய நாடாளுமன்ற உறுப்பினர் மைக்கல் கிரிம் தெரிவித்துள்ளார்;.

காற்றுள்ளபோது தூற்றிக்கொள்ளுவது போல, எமக்குச் சாதகமானவற்றை நாம் துரும்பு என்றாலும் அதை துருப்புசீட்டுப்போல எமது காரியம் நடக்க பாவித்துக்கொள்ளவேண்டும். இதில் பெயர்கள் விலாசங்கள் கொடுத்தால் சிறீலங்கா போகமுடியாதோ என்று கவலைப்படவேண்டாம். இங்கு நம்பகத்தன்மை பேணப்படும். சுயாதீனமான சர்வதேச விசாரணைக்கு பிரித்தானிய அரசை ஆதரவளிக்க வைக்க பிரித்தானிய பாராளுமன்றத்தில் தீர்மானம் வரவேண்டும்.

சில சிறீலங்கா அரசோடு வியாபாரம் செய்யும் தமிழ்வர்த்தகர்களும், reconciliation என்றும் புணருத்தாரணம் என்றும் நலன்புரித்திட்டங்களின் ஈடுபடுவதாகச்சொல்லிக்கொள்பவர்களும் பல நொண்டிச்சாட்டுகள் சொல்லி உங்களையும் குழப்பக்கூடும். அரசியல் விழிப்புணர்வோடு செயற்படுங்கள். இனப்படுகொலை நடக்காத பெரிய பிரித்தானியாவில் கொட்லன்ட் பிரிந்து போவது பற்றி விருப்பு வாக்கெடுப்பு விரைவில் வைப்பது பற்றிக் பேசுகிறார்கள். ஏனெனில் ஸ்கொட்டிஸ் மக்கள் தம்மை ஒருதேசிய இனமாக அடையாளப்படுத்திக்கொள்கிறார்கள். ஆனால் இனவழிப்பு நடந்த நடந்துகொண்டிருக்கும் எம் தேசத்தில் reconciliation என்று சேர்ந்து வாழவைப்பது பற்றிக் கதைக்கிறார்கள். இதற்குக்காரணம் யார் என்று யோசியுங்கள். அரசியல் வாதிகளின் வார்த்தை ஜாலங்களை களைந்து விட்டு, அவர்களின் பேச்சில் வரும் செய்தியையும், அவர்களின் நிலைப்பாட்டையும் அறியுங்கள்.

எமது அரசியல் வாதிகள், உள்ளுராட்சிச்சபை உறுப்பினர்களும் (councilors) கையெழுத்திட்டு, இதை முன்னெடுக்க முன் வர வேண்டும். இதை செய்வதற்கு அவர்களுக்கு அவர்களின் முழுநேரமும் தேவைப்படாது.

  • கையெழுத்திடுவதற்கு கீழ்வரும் இணையத்தள முகவரிக்குச் செல்லுக (To sign click link below) http://epetitions.direct.gov.uk/petitions/14586
  • விசாரணையை வேண்டுவதற்கு நடந்த சாட்சியாக கீழ்வரும் இணையத்தள முகவரிக்குச் செல்லுகChannel 4 has produced a video on this under title killing fields you can see it in the link below. http://www.channel4.com/programmes/sri-lankas-killing-fields/4od