ஐபோனில் மன்னர் மகிந்தரும் மனிதவுரிமை அமைச்சர் சமரசிங்கவும்

1238

சதா [ ஒரு பேப்பருக்காக ]

மகிந்த: ஹலோ சமரசிங்க. ஒண்ணை நம்பி ஐ.நா.வுக்கு அனுப்பினது என்னோட முட்டாள்தனம்தானே. சொளை சொளையாய் சல்லியும் கொடுத்து எழுபது ஆக்களையும் கூட்டி கொடுத்து குண்டிலே எனக்கு நானே ஆப்பு சொருகினதுதானே. பீரிசு சொன்னது ஒண்ணை நம்பினா எனக்கு ஆப்புத் தான் எண்டு நான்தான் அவரை பேசி அடக்கிப்போட்டுது.

சமரே: மாத்தயா நான் எல்லா நாட்டுக்காரன்களிட்டையும் எங்கட நெலமையை எடுத்து சொன்னது. தாமரா நோனா கூட அவங்களோட படுத்து படுத்துதான் பேசிப்பாத்தது. வெள்ளைகாரங்க ஒங்கட பொய் கதை கதைக்க வேண்டாம் எண்டது. கறுப்பு ஆக்கள்தான் அவாவோடை பேச்சுக் கொடுத்தது. பாவம் தாமரா களைச்சுப் போச்சுது. நீங்க சொல்லிக் கொடுத்த பொய் எல்லாம் நான் உண்மை மாதிரியே சொன்னது. அதுக்கு அவங்க சொன்னது நீங்க மூளு வருசமா இதைத்தான் திருப்பி திருப்பி சொல்லுறது எண்டு.

மகிந்த:  பீரிசு என்ன சொன்னது போனை போட்டா எடுக்கிதில்லே?

சமரே: நான் கூட்டத்திலை பேச தொடங்கவே அவரு மைக்ரோ போனை புடுங்கிப்போட்டு பேசாமல் இருந்தது. பக்கத்திலே இருந்த டக்ளஸ் மல்லி அதை போட்டு கேக்க சொன்னது. அதுக்கு பீரிசு அவரு மேலே ஏறிப்பாஞ்சு ஒண்ணைத்தான் முதல்லே போடோணுமெண்டு மிச்சம் பேசிப்போட்டுது தானே.

மகிந்த: எயா தெமிழோ சரிவிடு. சரி மல்லி யாரோட பேசினது.

சமரே: அவனுக்கு இங்கிலீஸ் தெரியாது தானே. அவன் ஆக்களை கண்டா கண்ணாடிக்கு மேலே கண்ணை ஒசத்தி எந்த நாட்டுகாரங்க எண்டு கேக்கும். அப்புறம் கிட்ட போயி ர்நடி வழ ளுசi டுயமெய எண்டு கேக்கும். அது கூட நான் தானே அவருக்கு சொல்லி கொடுத்தது.

மகிந்த: எங்கட சீனாக்கார ஆக்கள் ஒங்களுக்கு நல்ல ஒதவி செஞ்சதா?

சமரே: அவங்கதானே மிச்சம் மிச்சம் ஒதவி செஞ்சது. ஆனா வெள்ளைகாரன்க அவங்களுக்கு சொன்னது தெமிழன்ர பிரச்சனை ஒங்களைவிட எங்களுக்கு தான் கூட தெரியுமெண்டு.

மகிந்த: இண்டியாகாரன் எங்களை அண்டை நாடு அண்ணன் நாடு எண்டு போட்டு கடைசி நேரத்திலே அடியை காட்டினது தானே. அவங்களுக்கு பெரிய ஆப்பு ஒண்டு சீவி எடுத்து சொருக வேணும் சரியா?

சமரே: இது பத்தி பீரிசும் நானும் கடுமையாய் அவங்களோட சண்ட போட்டது. மிச்சம் பெரிய சண்டே. அப்ப இன்டியா ஆளு ஒண்டு சொன்னது எங்களுக்கு தெமிழ்நாட்டுகாரங்க பிரச்சனை, அமெரிக்காவோட பிரசர். இதுக்குமேலே எங்கட கட்சிக்குள்ளாடி பொளவு. இப்படி இருக்க நாங்க ஒங்களுக்கு ஒதவி பண்ண வந்தா நீங்க பாகிஸ்தான் ஆமிகாரங்களை கூப்பிட்டு அவங்களோட கூட்டம் போடறது. ஒங்கடை நாட்டை சுத்தி சுத்தி காட்டிறது. அவங்களை சீனாகாரங்க அனுப்பித்தான் அவங்க ஒங்களிட்டை வருது எண்டு நாங்க சொல்லி கொடுத்தும் நீங்க கேக்கிறது இல்லைதானே எண்டு மிச்சம் கோபப்பட்டது தானே.

மகிந்த: அவங்களுக்கு பயம் வரோணும் எண்டுதான் கோட்டா மல்லி அப்படி செஞ்சது. அவங்க கோபப்படுவாங்க எண்டா கோட்டா இப்படி செஞ்சிருக்காதுதானே. சரி நீங்க கோட்டா மல்லியை கொறை சொல்ல கூடாது சரிதானே.

சமரே: மாத்தயா அவங்க சொன்னதைத்தான் நான் ஒங்களுக்கு சொன்னது. மலேசியாகாரன் கூட கடைசி நிமிடம் வரைக்கும் ஒங்களுக்குத்தான் எங்கட வாக்கு எண்டு சொன்னது. அப்புறம் அங்கினை ஓரமா உட்காந்திருக்கி. நான் அவங்களை எட்டிப் பாத்தா அவங்க வேற பக்கம் பாத்தது தானே. புலிக்கிட்ட சல்லி கில்லி வேண்டின போல.

மகிந்த:  மலேகாரனை தூக்கி போடு ஆனா இண்டியா தவிர மத்த ஏசியாகாரன்க எங்களுக்கு தானே சப்போர்ட். புலியாளுங்க நெனக்குது வெள்ளைகாரங்கள புடிச்சு எங்கள புடுங்கலாமெண்டு. ஆனா கோட்டா மல்லி நெனைச்சா இங்கே இருக்கிற தெமிழன் எல்லாத்தையும் புடிங்கி எறிஞ்சு போடும் சரியா. ஆனா ஒங்கே உள்ள தெமிழனுக்குத்தான் எங்க மேலே மிச்சம் மிச்சம் கோபம் இருக்கி. ஆக்களை கொண்டது, பொண்ணுங்கள கெடுத்தது, பட்டிணி போட்டது. இத நான் கோட்டாக்கு சொன்னது. எங்கட குடும்பத்திலே ஓராளுக்காவது ஒரு தெமிழன் வந்து எண்டைக்காவது ஒரு நாள் கோவணம் கூட இல்லாம மானத்தில சுடுமண் கிள்ளி போட்கிட்டு போகுமெண்டு.

சமரே: வெள்ளகாரன்கிட்டேயும் ரஸ்சியா எங்க பக்கம் தானே நிக்குது. ஆனா ஒண்டு மட்டும் நான் பாத்தது. இந்த தடவ மிச்சம் மிச்சம் தெமிழ் ஆக்களு இங்கே வந்து எல்லா நாட்டுகாரன்களேடேயும் பேசினது. கைநெறைய போட்டோக்கள், னஎன, எல்லாம் கொண்டு வந்து அவங்களுக்கு கொடுத்ததுதானே. அடுத்த வருசம் இன்னும் தெமிழன் இங்கே வரப்போகுது. இந்த தடவை கூட எங்கள கோபப்படுத்திற மாதிரி கேள்வி கேட்டுப் போட்டு நாங்க கோபப்பட்டு பேச மத்த ஆக்களு எங்கள கண்டிக்க தெமிழன் எங்கள பாத்து சிரிச்சதுதானே. அதுதான் எங்களுக்கு சங்கடமாப் போச்சு.

மகிந்த: மு.P. கருணா எல்லாம் எனக்கு உறுதியாய் சொல்லி இருக்கி. மேலே நாட்டில உள்ள தெமிழனை எல்லாம் பாகம் பாகமா பிரிச்சுப்போட்டு அப்புறம் சண்டை மூட்டிவிட்டு அப்புறம் அடிபட்டு ஆளை ஆள் காட்டிக் கொடுத்து வெள்ளைகாரனோட சிறையிலேயே போட்டுத்தாறம் எண்டு, அதிலே பாத்தா அவங்க மிச்சம் சக்சஸ் வந்;திருக்குத்தானே எங்களுக்கு. பெரிசா நடக்கிற மாவீரர் நாளைக் கூட நாற்பது துண்டா ஒடைச்சு தந்தது தானே. தெமிழனுக்கு சல்லிதானே முக்கியம். அதுதானே நான்போன பட்ஜட்டுல கோட்டாவின்ட அமைச்சுக்கு பெரிய தொகையா போட்டது. கோட்டா பணத்தை கொடுக்க கொடுக்க கேப்பி பக்காவா காரியத்தை முடிச்சு கொடுக்கும் தானே.

சமரே: மாத்தயா எங்கட முஸ்லீம் அமைச்சு ஆக்கள் வந்ததுதானே. அவங்கதான் அரபு நாட்டுகாரன்களோட பேசி எங்களுக்கு சப்போர்ட் வாங்கி கொடுத்தது. அவங்க பிரியாணி விருந்தெல்லாம் போட்டு தாமரா குணநாயகத்தையும் கூட்டிப் போய் அரபுகாரன்களிக்கு அவ கையாலேயே பரிமாறினது தானே.

மகிந்த: ஒங்களுக்கு அந்த முஸ்லீம் ஆக்ள பத்தி தெரியாது. அவங்களோட மிச்சம் கவனமா இரிக்கோணும். நான்தான் தாமிராவுக்கு ஓடர் போட்டது. முஸ்லீம் ஆக்ளு பேசிற இடமெல்லாம் நீங்க இரிக்கோணும் எண்டு. அவங்கள தெமிழன் கிட்ட போகாம நாங்க வைச்சிரிக்கோணும். ஆனால் அவங்கள மிச்சம் நம்பக் கூடாது. எங்களுக்கு ‘பேப்பே’ காட்டிக்போடும். தெமிழனுக்கு ஒரு தீர்வை கொடு எண்டு எங்கள எந்த நாடேனும் நெருக்கினா எங்களுக்கும் ஒரு ‘அலகு’ வேணுமெண்டு அவங்க போயி அடம்புடிச்சு எல்லாத்தையும் கொழப்பிக் கொண்டே இரிக்கோணும். இதுக்குத்தான் எங்களுக்கு அவங்க தேவை. தெமிழன் நேருக்குநேரு சண்டைக்கு வரும் ஆனா இவங்க சந்தர்ப்பம் கெடைச்சா சாறத்தை பின்னாடி தூக்கிட்டு பெரிசா சொருகிப் போடும். சரிதானே. சரி சமரசிங்க நான் மீனு வேண்ட போகவேணும். சரியோ. தாமரா கறுப்பு ஆக்களை புடிச்சது. சீனாகாரன் கொஞ்சநாட்டை புடிச்சு தந்தது. மத்த கொஞ்சம் அமெரிக்காவை எதிர்க்கோணுமெண்டு வாக்கு போட்டது. அப்ப நீங்க யாரைப் புடிச்சீங்க? என்னைய விட எண்ட மல்லி கோட்டாதான் ரொம்ப கடுப்பிலே இருக்கி நீங்க எழுபது பேரும் நாட்டுக்கு வந்ததும் நேரே கோட்டாவைத்தான் பாக்கோணும் சரியா.

சமரே: சரி மாத்தையா. எனக்கு ஒரு டவுட்டு இருக்கி இந்த முஸ்லீம் ஆக்களு தங்களுக்கு ஒரு ‘அலகு’ வேணுமெண்டு சொல்லுது தானே அது என்ன அலகு?

மகிந்த:  இந்த அலகு என்னா எண்டு எங்களுக்கும் தெரியாது தெமிழனுக்கும் தெரியாது. இது ரவூப் பக்கீமுக்கு மட்டும்தான் தெரியும். ஆனா நாங்களும் இது என்னா எண்டு அவங்கள கேக்க கூடாது சரியா.