ஐரோப்பிய ஒன்றியம் – பிரித்தானியா இடையே வர்த்தக ஒப்பந்தம் எட்டப்பட்டது.

34

ஐரோப்பிய ஒன்றியம் – பிரித்தானியா இடையே வர்த்தக ஒப்பந்தம் எட்டப்பட்டது.
ஐரோப்பிய ஒன்றியமும் பிரித்தானியாவும் பிரெக்சிற்றுக்குப் பின்னரான வர்த்தக ஒப்பந்தத்தை எட்டியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், மீன்பிடி உரிமைகள் மற்றும் எதிர்கால வர்த்தக விதிகள் குறித்த பலமாத கருத்து வேறுபாடுகள் இன்றுடன் (வியாழக்கிழமை) முடிவுக்கு வந்துள்ளன.இதுகுறித்து, டவுனிங் ஸ்ட்ரீற் பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய பிரித்தானிய பிரதமர் பொரிஸ் ஜோன்சன், சட்டங்கள் மற்றும் விதியின் கட்டுப்பாட்டை திரும்பப் பெற்றுள்ளதாக அறிவித்துள்ளார்.

அத்துடன், வர்த்தகப் பேச்சுவார்த்தைகள் கடுமையானவை என்றாலும், இது முழு ஐரோப்பாவிற்கும் நல்லதொரு ஒப்பந்தம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.இதேவேளை, இந்த ஒப்பந்தம் நியாயமான மற்றும் சீரானது என ஐரோப்பிய ஒன்றியத் தலைவர் உர்சுலா வொன் டெர் லேயன் கூறியுள்ளார்.

பிரஸ்ஸல்ஸில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர், பிரித்தானியாவுடனான வர்த்தக ஒப்பந்தம் நீண்ட மற்றும் நெருக்கடியான நிலையை அடைந்தததாகவும், எனினும் தற்போது நல்ல ஒப்பந்தம் கிடைத்துள்ளதாகவும் லேயன் குறிப்பிட்டுள்ளார்.

பிரெக்சிட்டின் முக்கிய பிரச்சினைகளான வரி விதிப்பு இல்லாத ஒற்றைச் சந்தை அனுமதி, ஐரோப்பிய நீதிமன்றத்திற்கு அடிபணியத் தேவையின்மை என பிரித்தானியா விரும்பியது போலவே உருவாக்கப்பட்டுள்ளது.

இப்போதைய கொரோனா குழப்பத்தின் மத்தியில் இன்னொரு குழப்பம் நேராமல் இது தடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், ஒப்பந்தம் முடிவடைந்தது என பிரதமர் போரிஸ் ஜோன்சன் டுவீட் செய்துள்ளார், இங்கிலாந்து ஐரோப்பாவின் நட்பு நாடாகவும் முதலிட சந்தையாகவும் இருக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.இதுதொடர்பாக ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன் கூறுகையில், நாங்கள் இறுதியாக ஓர் ஒப்பந்தத்தைக் கண்டுபிடித்துள்ளோம். இது ஒரு நீண்ட மற்றும் முடிவில்லா சாலையாக இருந்தது.

ஆனால் அதன் முடிவில் எங்களுக்கு ஒரு நல்ல ஒப்பந்தம் கிடைத்துள்ளது” என குறிப்பிட்டுள்ளார்.

-ஈழம் ரஞ்சன்-