இப்புகைப்படத்தில் காணப்படும் மாணவி இசைப்பிரியாவின் மகள் அல்ல. இது முற்றிலும் தவறானது. இறுதி போரின் போது சிறிலங்கா படையினரால் படுகொலைசெய்யப்பட்ட விடுதலைப்புலிகளின் தேசிய தொலைக்காட்சியின் செய்தி வாசிப்பாளர் இசைப்பிரியாவிற்கும் இதில் காணப்படும் மற்றைய மாணவிற்கும் எவ்வித தொடர்பும் இல்லையென்பதை அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளார்கள். இசைப்பிரியாவின் குழந்தை இறுதியுத்தகாலத்தில் பலியாகிவிட்டது என்பதை இதில் அறியத்தருகின்றோம்.
விடுதலைப்புலிகளின் முக்கிய தளபதிகளில் ஒருவரான சிறிராம் அவர்களுக்கும் இசைப்பிரியா அவர்களுக்கும் 08.02.2006 அன்று திருமணம் இடம்பெற்றது. இவர்களுக்கு 18.09.2008 அன்று அகல்யாழ் என்ற மகள் பிறந்திருந்தார். அகல்யாழ் 15.03.2009 அன்று மாத்தளனில் பலியாகியிருந்தார்.
போரின் இறுதி நாட்களில் நந்திக்கடல் சமரில் ஈடுபட்ட முக்கிய தளபதிகளில் சிறிராமும் ஒருவர்.
சரியான தகவல்களை உறுதிப்படுத்தாமல் வெளியிடவேண்டாம் என்பதையும் இந்தச்செய்தியினை வெளியிட்ட இணையத்தளங்கள் மற்றும் முகநூல் பாவனையாளர்கள் அனைவரும் நீக்கிக்கொள்ளுமாறு தாழ்மையுடன் கேட்டுகொள்கின்றோம்.
இங்கு இணைக்கப்பட்டுள்ள மாணவி மாவீரர் மறைச்செல்வன் அவர்களின் மகள் இசைப்பிரியா என்பதை இங்கு குறிப்பிடுவதோடு இம்மாணவி க.பொ.த.சாதாரணதரப்பரீட்சையில் அதிவிசேட சித்தியினைப் (9A) பெற்றுள்ளமையிட்டு நாமும் மகிழ்வதோடு வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கின்றோம்.
மேலும் சமூக வலைதளங்களில் அப்பாவி மக்களின் ஆர்வகோளாறை பயன்படுத்தி செய்திகளை திரித்து வெளியிட்டு அதன் மூலம் தங்களின் வருவாய்,sharesஐ குறுக்கு வழியில் அதிகபடுத்த துணியும் பல இணையதளங்கள்,ஊடகங்கள். தங்களது கபட நோக்கங்களை கைவிட்டு மக்களுக்கு சரியான சேவையை வழங்குவதை முதற்பணியாக கொண்டு நடத்தல் வேண்டும்.மக்களும் சற்று சுய அறிவுடன் சொந்தமாக சிந்தித்து ஆர்வகோளாறுதனத்தை கட்டுபடுத்தும் போது.. இத்தகைய இணையதளங்களின் செய்தி திரிப்பு மோசடிகளும் இல்லாது போகும்.செய்திகளை உறுதிபடுத்தி வழங்குவதை அனைவரும் கருத்தில் கொண்டு நடத்தல் வேண்டும்.