உலகை வியக்க வைக்கும் இஸ்ரேல் உளவுதுறை

69

கடந்த எழுபது ஆண்டுகளில் இசுரேல் நாட்டின் உளவு அமைப்புகளான mossad, Shin Bet, ஆகியவை 2700 படுகொலைகளை தமது எல்லைக்கு வெளியேயுள்ள நாடுகளில் நிகழ்த்தியிருக்கின்றன. இவற்றில் அநேகமானவை மேற்குல நாடுகளில் நடந்தவை. Yediot Aharonot என்ற உளவுப்பத்திரிகையின் செய்தித்தொடர்பாளர் Ronen Bergman என்பவரால் வெளிப்படுத்தப்பட்ட தகவல்களின் படி, பல கொலைகள் இலக்கினை மெல்ல மெல்லக் கொலைசெய்யும்பட்டியலிலும், பல கொலைகள் வேகமாகக் கொலைசெய்யும் பட்டியலிலும் வரிசைப்படுத்தப்பட்டுச் செய்யப்படுவதாகச் சொல்லப்படுகிறது.

மெல்ல மெல்லக் கொலை செய்யும் பட்டியலில் உள்ளடக்கப்படுவோர் பற்பசைகளில் நஞ்சு செலுத்தப்பட்டுக் கொல்லப்பட்டிருக்கிறார்கள். வீடுகளில் நுழைந்தோ அல்லது வேறுவிதமாகவோ அவர்கள் உபயோகிக்கும் பற்பசைகளில் நஞ்சினைச் செலுத்திவைத்துவிட்டால், அவர்கள் உபயோகிக்கும் நாட்களில் மெல்ல மெல்லக் கொல்லப்படுவார்கள். வேகமாகக் கொல்லப்படவேண்டியவர்கள் அவர்களது கைத்தொலைபேசிகளில் குண்டுபொருத்தப்பட்டும், ஊர்திகளின் சக்கரங்களுக்குள் குண்டு வைக்கப்பட்டும், Drone மூலமாகவும் கொள்ளப்படுகிறார்கள். இவர்களில் அதிகமானோர் ஈரானைச் சேர்ந்த அணுவிஞ்ஞானிகள்.

பலஸ்தீன விடுதலை இயக்கத் தலைவர் யாசேர் அரபாத் அவர்கள், அணுக்கதிர் வீச்சு மூலமே கொல்லப்பட்டிருக்கிறார். இதுவும் நீண்டகாலத் திட்டமே. அவர்வாழுகின்ற இடத்திற்கு அருகாமையிலிருந்து இந்த அணுக்கதிர் வீச்சு நிகழ்த்தப்பட்டிருக்கிறது என்று குறிப்பிடுகிறார் இந்தப் பத்திரிகையாளர். அவர் நோய்வாய்ப்பட்டு இறந்தபோதுகூட, என்ன நோய் என்று சொல்லப்படவில்லை.

“If someone comes to kill you, rise up and kill him first.” என்பது இசுரேலியர்களின் பொன்மொழி. எவராவது உன்னைக்கொல்ல திட்டமிடும்முன்பே அவர்களை நீ கொன்று விடு என்பது இசுரேலியர்களின் இரத்தத்தில் ஊறிய வாசகம்.

அமெரிக்க சனாதிபதிகளாக இருந்த George w.Bsuh உம், Barack Obama வும் தங்களது கொலைமுறைகளை தத்தெடுத்துச் செயற்படுத்தினார்கள் என்ற பெருமையையும் இசுரேல் வெளிப்படையாகவே சொல்கிறது. Drone கள் மூலம் தமக்கு எதிரானவர்களைத் தாக்கி அழிக்கும் திட்டங்களை அமெரிக்க சனாதிபதிகளின் கையெழுத்தின்றிச் செய்யமுடியாது. இதுவரையில் George w.Bsuh அவர்கள் 60 கொலைகளுக்கும் Barack Obama அவர்கள் முந்நூறுக்கு மேற்பட்ட கொலைகளுக்கும் கையெழுத்திட்டிருக்கிறார்கள்.

2016 ஆம் ஆண்டுவரை mossad இற்குத் தலைமைதாங்கிய Meir Dagan என்பவர் வித்தியாசமான சிந்தனை கொண்டவர். நேரடியாக இலக்கை அழிப்பதற்குப் பதிலாக, இந்த இலக்கின் இயங்குதிறனை சிதைப்பது சிறந்தது என்ற சிந்தனை கொண்டவர். அதாவது, ஊர்தி ஒன்றை அழிப்பதை விட அதனது சிலபாகங்களை அகற்றிவிட்டால் அதை நகராமல் தடுக்கமுடியும். அதேவேளை அந்த ஊர்தியின் சாரதியைக் கொல்வதனால் , சில அதிவேகப்பலன்களையும் பெற்றுக்கொள்ளமுடியும். எது சூழ்நிலைக்கு நல்லதோ அதைச் செய்வதே நல்லது என்று சொல்லிக்கொள்வார்.

-தேவன்