நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் ஆற்றிய சிறப்புரை

438

இந்நிகழ்ச்சி ஜுலை 17ம் திகதி வெள்ளிக்கிழமை மாலை 6.30 மணிக்கு லண்டன் ஹரோவில் உள்ள கட்வா படிடார் நிலையத்தில் ( Kadwa Patidar Centre,Kenmore Avenue,Harrow, HA3 5BD) இல் நடைபெற்றது.

தமிழ் மக்களின் அரசியல் போராட்ட வரலாறு, தீர்வுக் கோட்பாடுகள் மற்றும் சமகால அரசியல் நிலைமைகள் உட்பட பல விடயங்கள் பற்றி தனது உரையில் குறிப்பிட்டுப் பேசிய முதலமைச்சர் விக்னேஸ்வரன், திம்புக் கோட்பாடுகளின் அடிப்படையில் தீர்வைக்காண தமிழ் மக்கள் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என்று அழைப்பு விடுத்தார்.

முதலமைச்சர் விக்னேஸ்வரனை கௌரவித்து சர்வதேச தமிழ் செய்தியாளர் ஒன்றியத்தின் தலைவி ஆனந்தி சூரியப்பிரகாசம் ( இளைப்பாறிய பி.பி. சி. ஊடகவியலாளர்) இந்த நிகழ்வில் நினைவுச் சின்னம் ஒன்றை வழங்கினார்.

இந்த நிகழ்விலே ஊடகவியலாளர் மயில்வாகனம் நிமலராஜன் அவர்கள் படுகொலை செய்யப்பட்ட தினமான ஓக்டோபர் 19 ம் திகதியை ‘ஈழத்தமிழ் ஊடகப்பணியாளர் படுகொலை நாள்’ என்றும் சர்வதேச தமிழ் ஊடகவியலாளர்கள் ஒன்றியம் பிரகடனம் செய்தது.

புல்லாங்குழல் பக்க வாத்தியங்களுடன் ( க. ஜனநாயகம், அ . ஞானசுந்தரம், ஸ்ரீராம் சிரியானந்தா) ஆரம்பமான இந்த நிகழ்வில் பல கலை நிகழ்சிகளும் இடம்பெற்றன. திருமதி பத்மினி குணசீலன் மற்றும் திருமதி நளாயினி அவர்களது மாணவிகள் நடன நிகழ்வுகளை வழங்கினர்.

வண பிதா ஜெபநேசரத்தினம் , கலாநிதி சுதாகரன் நடராஜா ( பன்னாட்டு உறவுகள் கற்கைநெறி விரிவுரையாளர், லண்டன் பல்கலைக்கழகம்), ஹறோ மேயர் சுரேஷ் கிருஷ்ணாஆகியோரும் இந்த நிகழ்வில் உரை ஆற்றினர்.