சீன கோடிஸ்வரர்,ஆசிய – சீன நட்பு நாடுகளுக்கு கோவிட்19 உதவி

119

சீன கோடிஸ்வரரும் அலிபாபா குழும ஸ்தாபகருமான ஜக்மா,கோவிட்19 வைரஸினால் பாதிப்படைந்துள்ள நாடுகளுக்கு உதவி செய்ய முன்வந்துள்ளார்.கோவிட்19 வைரஸ் பரவலினால் உலக நாடுகள் அவதியுறும் நிலையில்,ஆசிய நாடுகளுக்கு இவரின் உதவி மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று கூறப்படுகின்றது.

மருத்துவ உபகரணங்கள்,மருந்து பொருட்கள்,பாதுகாப்பு பொறிமுறைகள் என்று பலதரப்பட்ட உதவிகளை சிறிலங்கா உட்பட பல ஆசிய நாடுகளுக்கு செய்வதற்கு ஜக்மா இணங்கியுள்ளார், 1.8 மில்லியன் Masks , 210 ஆயிரம் சோதனை உபரகணம்,36 ஆயிரம் பாதுகாப்பு உபகரணங்களை,முறையே ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ், கம்போடியா, லாவோஸ்,மாலைதீவு, மொங்கோலியா, மியன்மார், நேபால்,பாகிஸ்தான், சிறிலங்கா ஆகிய நாடுகளுக்கு அனுப்பி வைக்க உள்ளனர்.