யாழ்ப்பாண பல்கலை கழகம் வெறும் டியூஷன் சென்டராக இயங்கி வருகிறது என்கிறார் Dr குருபரன் .
உண்மைதான் இதன் விளைவுகள்…
1. கடந்த காலங்களில் யாழ்ப்பாண பல்கலை கழகத்தின் ஒரு சில பீடங்களை தவிர மற்றைய பீடங்கள் உருவாக்கிய பட்டதாரிகள் பலரும் குறித்த பட்டங்களுக்குரிய தகுதி நிலையை கொண்டு இருக்க வில்லை
2. குறிப்பிட்ட ஒரு பீடத்தை தவிர மற்றைய பீடங்களில் ஆங்கில மூலம் சித்தி வெறும் யாழ்ப்பாண பல்கலை மாணவர்களில் 50-60 % இற்கு அதிகமான மாணவர்களால் ஆங்கில மொழியில் சாதாரண விடயங்களை கூட பேசவோ அல்லது எழுதவோ முடிவதில்லை . ஆனால் ஆங்கில மொழி மூலம் பட்ட கல்வியில் எந்த சிரமும் இன்றி சித்தி பெறுகிறார்கள்
3. யாழ்ப்பாண பல்கலை கழக பட்டதாரிகளாக வெளியேறி அரச தொழில் வாய்ப்பை பெற்றுக்கொள்ளும் மாணவர்களில் பெரும்பாலானோர் துறை சார்ந்து சுயாதீனமாக சிந்தித்து தீர்மானம் எடுக்க முடியாத நிலையில் இருக்கிறார்கள் மேலதிகாரிகள் சொல்லும் விடயங்களை மட்டும் செய்யும் கிளிப்பிள்ளைகளாகவே இருக்கிறார்கள். ஒரு பல்கலை பட்டதாரி கொண்டு இருக்க வேண்டிய அடிப்படை Skills (Critical Thinking, Problem Solving, Communication, Interpersonal etc) எவையும் இவர்களிடம் இல்லை.
4. யாழ்ப்பாண பல்கலை கழகத்தில் இருந்து பட்டதாரிகளாக வெளியேறி வெளிநாடுகளில் தஞ்சம் அடைந்துள்ள பட்டதாரிகளின் 80 % இற்கும் அதிகமான பட்டதாரிகள் Under employment வேலைகள் தான் செய்கிறார்கள் . குறிப்பாக லண்டன் போன்ற ஐரோப்பியா நாடுகளிலும் கனடா , அவுஸ்திரேலியா போன்ற நாடுகளிலும் இலங்கை பட்டபடிப்புகளுடன் தொழில் வாய்ப்புகளை பெற்று கொள்ள சகல வாய்ப்புகளும் இருந்தும் எங்கள் பல்கலை மாணவர்களால் நேர்காணல்களை வெற்றி கொள்ள முடிவதில்லை . உண்மையை சொன்னால் தங்கள் துறை சார்ந்த தொழில்களை பெற்று கொள்ள குறிப்பிட்ட மாணவர்களிடம் இருக்கும் தாழ்வு சிக்கலகள் அனுமதிப்பதில்லை
இந்த அவல நிலைக்கு யார் காரணம் ?
அரசியல், இராணுவ நெருக்குவரங்களுக்கு அப்பால் பல்கலை சமூகமும் ,அதன் நிருவகமுமே இந்த அவல நிலையை பொறுப்பேற்க வேண்டும் . குறிப்பாக யாழ்ப்பாண பல்கலை ஆசிரிய சமூகத்தின் பலவீனம் / , நிருவாகத்தின் பதவி வெறி ,அசண்டையீனம், பதவி போட்டி, நிறுவன அரசியல் என பல்வேறு காரணிகளால் ஒரு பல்கலை கழகத்தை சீரழைத்து வருகிறார்கள் .அதை பற்றி அவர்கள் ஒரு போதும் கவலைப்பட போவதில்லை .
இப்போது கூட இரண்டு பேராசிரியர்கள் துணை வேந்தர் பதவிக்காக டக்ளஸ் தேவானந்தா அலுவலகத்திலும் அங்கயன் அலுவலகத்திலும் தஞ்சம் அடைந்து இருக்கிறார்கள்
மறுபுறம் இன்னுமொரு இளைப்பாறிய பேராசிரியர் தமிழ் தேசிய கட்சி ஒன்றில் தேசிய பட்டியல் நியமனத்தை எதிர்பார்த்து குறிப்பிட்ட கட்சியின் அதிகாரமிக்க அணியின் துண்டு பிரசுரங்களுடன் வீதிகளில் அலைந்து கொண்டு இருக்கிறார்
இந்த நிலை மாற வேண்டும் .யாழ்ப்பாண பல்கலை கழகம் மீளுருவாக்கம் செய்யப்பட வேண்டும் என்கிற Dr குருபரன் அவர்களின் கருத்து நியாயமானது .ஆனால் அந்த மாற்றத்தை செய்யப்போவது யார் என்பதே கேள்வி