தெலுங்கு நாயக்க சிங்கள வெறியர்களால், சிறிலங்கா
இராணுவம் மற்றும் காவல் துறை ஆதரவுடன்…
யாழ்ப்பாண நூலகம் தீவைத்து எரிக்கப்பட்ட
தினம் இன்று (31/5/1981 – 1/6/1981).
சிறிலங்கா
அமைச்சர் காமினி திசநாயக்கன் உள்ளிட்ட சிங்கள
தலைவர்கள் முன்னின்று இதை
நிகழ்த்தினார்கள்.
இது ஒன்றே போதும் தமிழ்
இன அழிப்பை பறைசாற்ற.
இன அழிப்பு
என்றால் என்னெவென்று அறிந்தோருக்கு
இதை விளக்க வேண்டிய அவசியம் இல்லை.
தென் கிழக்கு ஆசியாவின் மிகப்பெரும்
நூலகமாக விளங்கியது யாழ்ப்பாண நூலகம்.
தமிழர்களின் அறிவுக் கருவூலம் என்றே இதை
அழைக்கலாம். 97,000 அரிய நூல்களுடன் /
பண்டைய ஓலைச் சுவடிகள் / தமிழ் நாட்டில்
கூட இல்லாத அப்பூர்வ நூல்கள்…
என்று
புராதன வரலாறு கொண்ட நூலகம்
கொளுத்தப்பட்டது .
எரியும் யாழ்ப்பான நூலகத்தை தமிழர்கள் எவ்வாறு நேசித்தார்கள் என்பதை
ஓர் பிரெஞ்ச் பத்திரிக்கை இவ்வாறு எழுதியது…
”யாழ்ப்பாண தமிழர்கள் எரிந்துகொண்டிருக்கும் இந்நூலகத்தின் முன்பு அழுது புரள்கிறார்கள்
சாப்பாடும் நீரும் இன்றி கண்ணீர் வழிய கதறி அழுகிறார்கள்….
உலகின் முக்கியமான அறிவு கருவூலம் ஓன்று இனத்தீயில் வெந்துகொண்டிருக்கிறது”
“எங்கு நல்ல புத்தகங்கள் எரிக்க படுகின்றதோ
“எங்கு நல்ல புத்தகங்கள் எரிக்க படுகின்றதோ
அங்கு விரைவில் நல்ல மனிதர்களும்
அங்கு விரைவில் நல்ல மனிதர்களும்
எரிக்கப்படுவார்கள்
எரிக்கப்படுவார்கள்
– சே குவரா